விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவர் சிவராமன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!
சென்னை கொடுங்கையூரில் சாலையில் கனமழையால் காரணமாக வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதில், அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் இரு சிறுமிகள் (யுவஸ்ரீ, பாவனா) உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தல 10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மற்றும் அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பீகார் மற்றும் அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து பீகாருக்கு 5 கோடியும் அசாம் மாநிலத்திற்கு 2 கோடி ரூபாயை மத்திய பிரதேச மாநில முதல்வர் தெரவித்துள்ளார்.
முன்னதாக நேற்று பீகார் மாநிலத்தில் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி நிவாரணப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் வழங்கி உள்ளார்.
பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு ரூ.,51000 நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தில், கல்லுாரிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு ரூ.,51000 நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ் செயல்படும், மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர், ஷாகிர் ஹுசைன் அன்சாரி கூறியது:-
சிறுபான்மையினர் விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்த கூட்டத்தில்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியும், கடலில் மீன் பிடிக்கும் போது படகு கவிழ்ந்தும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இன்று நிதியுதவி வழங்கினார்.
இதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை வடபழனியில் இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகினர்.
வடபழனி தெற்கு பெருமாள் வீதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தரை தளத்தில் இருந்த மின்சாரப் பெட்டி மூலம் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த புகைமூட்டத்தால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.