வெலிங்டனில் நடைப்பெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இந்திய அணியை விட 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக இடியுடன் கூடிய மழை காரணமாக இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கி இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 55 ஓவருக்கு 5 விக்கெட் இழந்து 122 ரன்கள் எடுத்திருந்தது. அஜின்கியா ரஹானே(38) மற்றும் ரிஷப் பந்த்(10) ஆகியோர் களத்தில் இருந்தனர். இதனைத்தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைப்பெற்றது. எனினும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா 68.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்தியா 165 ரன்கள் மட்டுமே குவித்தது.
It's stumps in Wellington with deteriorating light forcing the end of the day's play.
Kane Williamson's 89 gave New Zealand the advantage, but Ishant's three strikes kept India in the contest.#NZvIND Scorecard https://t.co/UxqdaHZ14g pic.twitter.com/jgluXRf9NX
— ICC (@ICC) February 22, 2020
அணியில் அதிப்பட்சமாக ரஹானே 46(138) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக மயங்க் அகர்வால் 34(84) ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய நியூ., வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். துவக்க ஆட்டக்காரர்கள் டோம் லோத்தம் 11(30), டோம் புல்லெண்டல் 30(80) ரன்களில் வெளியேறிய போதிலும், முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய கேன் வில்லியம்சன் 89(153) ரன்கள் குவித்து அணியின் பலத்தை கூட்டினார். அவருக்கு துணையாக ரோஸ் டெய்லர் 44(71) ரன்கள் குவித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். ஆட்டத்தின் 71.1-வது ஓவர் எட்டிய நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. ஆட்ட நேர முடிவில் வாட்லிங் 14(29) மற்றும் கோலின் டீ கிராண்டோம் 4(2) ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு உதவினார். இதனையடுத்து மூன்றாம் நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.