மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் 2024 பிளேஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை நேரடியாக இழந்துவிட்டது. அதாவது, இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் 8 தோல்விகளுடன் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் 19வது இடத்தில் உள்ளது. ஆனால், அந்த அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக இருந்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
மேலும் படிக்க | டி20 உலக கோப்பை : ரோகித் மனது வைத்தால் நடராஜனுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு! எப்படி?
6 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, SRH, KKR மற்றும் LSGக்கு எதிராக மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 12 புள்ளிகளை எட்டலாம். மற்ற போட்டிகளின் முடிவு MI-க்கு சாதகமாக இருந்தால் 4வது இடத்தைப் பிடிக்க 12 புள்ளிகள் போதுமானதாக இருக்கும்.
ஐபிஎல் 2024 புள்ளிகள் அட்டவணையில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இதுவரை விளையாடிய 10 லீக் நிலை ஆட்டங்களில் முறையே 16 மற்றும் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அணி அந்த இடத்தை எட்ட முடியாது. ஆனால் மும்பை நிச்சயமாக எஸ்ஆர்ஹெச் அல்லது எல்எஸ்ஜி அணிக்கு மேலான இடத்தை பெற ஒரு வாய்ப்பு இருக்கிறது.
இரு அணிகளும் ஏற்கனவே 12 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் மற்றும் மே 8 ஆம் தேதி இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. அந்த போட்டியில் வெற்றி பெறும் ஒரு அணி 14 புள்ளிகளை பெற்றுவிடும். அத்தகைய சூழ்நிலையில், KKR (மே 5), SRH (மே 8) க்கு எதிராக நடக்கவிருக்கும் மீதமுள்ள 3 போட்டிகளிலும் LSG தோல்வியடைந்தால், 4வது இடத்தை பிடிக்கும். அப்போது, IPL 2024 ப்ளேஆஃப்களுக்கு தகுதி பெற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு சிறந்த வாய்ப்பு இருக்கிறது. அதாவது டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளின் முடிவுகளும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருக்க வேண்டும். அதாவது, அந்த அணிகள் 12 புள்ளிகளை தாண்டக்கூடாது. ரன்ரேட் விகிதமும் அதிகமாக இருக்கக்கூடாது.
அப்படியான சூழ்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறலாம். ஒன்று மட்டும் தெளிவாக கூறினால், மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது அந்த அணியின் கையில் இல்லை என்பதால், இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் பிளே ஆப் விளையாட வாய்ப்பு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ