இன்று சனிப் பெயர்ச்சி 2023: எந்த ராசிக்கு கஷ்ட காலம்...பரிகாரம் என்ன?

Saturn Transit Today: சனி பெயர்ச்சி 2023 இன்று மாலை மகர ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, கும்ப ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். எனவே எந்தெந்த ராசியினருக்கெல்லாம் சனி பகவான் சிரமத்தை தர உள்ளார். எந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 17, 2023, 11:59 AM IST
  • சனி பெயர்ச்சி 2023 இன்று மாலை.
  • சிலருக்கு சனி பகவான் சிரமத்தை தர உள்ளார்.
  • எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
இன்று சனிப் பெயர்ச்சி 2023: எந்த ராசிக்கு கஷ்ட காலம்...பரிகாரம் என்ன? title=

கும்ப ராசியில் சனிப் பெயர்ச்சி 2023: சனி பகவானின் பெயர்ச்சி ஜோதிடத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதன் படி இன்று முதல் 2025 மார்ச் 29ம் தேதி வரை அடுத்த இரண்டரை ஆண்டுகள் கும்ப ராசியில் அமர்ந்து சனி பாடம் புகட்டப்போகிறார். பொதுவாக ஜோதிட ரீதியாக சனி பகவான் ஒரு அசுப கிரகமாக பார்க்கப்பட்டாலும், சனி கெடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்கிற கருத்தும் உண்டு. ஒருவரின் ஜனன கால ஜாதகப்படி அவருக்கு நடக்கும் தசா புத்தி பொறுத்து ஒருவருக்கு சனி பகவானால் சுப பலன்கள் ஏற்படுமா, அல்லது அசுப பலன்கள் அதிகம் ஏற்படுமா என்பது தெரியும்.

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி. அந்த வகையில் சனி பகவான் தனது சொந்த ராசியான மகரத்திலிருந்து மற்றொரு சொந்த ராசியான கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர உள்ளார். இதனால் எந்தெந்த ராசியினருக்கெல்லாம் சனி பகவான் சிரமத்தை தர உள்ளார். அதற்கான என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | Saturn Transit: சனியின் அதிசார சஞ்சாரத்துக்கு முடிவு! மகரத்தில் வக்ரமாகும் சனீஸ்வரர்

கடக ராசி பலன்
கடக ராசிக்கு அஷ்டம் சனி ஆரம்பிக்க இருக்கிறது. உங்கள் ராசிக்கு 8ல் அமரும் சனி பகவான் காரணமாக உங்கள் செயல்களில் பெரியளவில் வெற்றி கிடைக்காது. உத்தியோகஸ்தர்களும், தொழில் செய்பவர்களும் பணியிடத்தில் சில தடைகளையும், பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனால் நிதி சார்ந்த பிரச்னைகள் ஏற்படும்.

பரிகாரம்: திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று வரலாம்.

சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்கு கண்ட சனி ஏற்பட உள்ளது. இதனால் உங்களின் திருமண வாழ்க்கையில் தேவையற்ற மன வருத்தம் ஏற்படலாம். தொழில் செய்யக்கூடியவர்கள் உங்களின் கூட்டாளிகள், ஒப்பந்ததாரர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காத நிலை இருக்கும். உத்தியோகத்தில் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியது இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாள், மஹாலட்சுமியை வணங்கலாம். சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவான், பைரவரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

விருச்சிக ராசி் பலன்
விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி காலமாகும். மன வருத்தமும் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. வருமான இடங்களிலிருந்து சரியான நேரத்தில் பணம் கிடைக்க நிலை, தடைகள் சந்திக்க நேரிடும். சொத்து சம்பந்தமாக ஏதேனும் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பரிகாரம்: ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

மகர ராசி பலன்
மகர ராசிக்கு பாதசனி நடக்க உள்ளது. சிறு சிறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். கால்களில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சற்று அமைதி அதிகரிக்கும். ஒரு சில விஷயங்களில் சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும். உங்களின் வேலையில் கவனக்குறைவாகச் செயல்பட வேண்டாம்.

பரிகாரம்: சனி சாந்தி பரிகார ஹோமத்தில் பங்கேற்கலாம்.

கும்ப ராசி பலன்
சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியாக்குகிறார். இதனால் உடல் மற்றும் மன ரீதியாக பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நிதி நிலைமை பெரியளவில் பாதிக்கப்படும். உங்கள் செலவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சரியான திட்டமிடலுடன் செலவுகளைச் செய்யவும். வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் தேவையற்ற விவாதங்கள், மன கஷ்டம் ஏற்படும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சனீஸ்வர பகவானை தினசரி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மீன ராசி பலன்
மீன ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் விரய சனி பலன் பெற உள்ளீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் இல்லாத நிலை அல்லது நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். கோபத்தைக் கட்டுப்படுத்தி அனைவரிடமும் அன்பாக பழகுங்கள். உத்தியோகத்தில் வேலையை முடிக்க சிரமங்களை சந்திக்க வேண்டியது இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ நவக்கிரகம், ஸ்ரீ ஐயப்பன் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | செல்வந்தராக்கும் லட்சுமி குபேர பூஜையை எளிமையாக செய்யும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News