Shani Uday: கும்பத்தில் அஸ்தமன சனியாக அமைதியான சனீஸ்வரர் ’கம்மிங் பேக்’! 4 ராசிகளுக்கு தன யோகம்

Shani Uday March 9: ஜனவரி 31 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமனமான சனி பகவான் எதிர்வரும் மார்ச் 9ஆம் தேதி கும்பத்தில் மீண்டும் உதயமாகிறார்... செயல்படாமல் அமைதி காத்த சனீஸ்வரர் அதிரடியாக களம் இறங்குகிறார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 17, 2023, 08:57 AM IST
  • இன்னும் 20 நாளுக்கு பிறகு இவங்களை கையிலயே பிடிக்க முடியாது!
  • சனியின் உதயத்தால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்
  • அஸ்தமனமான சனி கும்பத்திலேயே உதயமாகிறார்
Shani Uday: கும்பத்தில் அஸ்தமன சனியாக அமைதியான சனீஸ்வரர் ’கம்மிங் பேக்’! 4 ராசிகளுக்கு தன யோகம் title=

வாழ்வில் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப சனி பகவான் பலன்களைக் கொடுப்பார். இதனால் தான் சனிபகவானுக்கு நீதி தேவன் என்ற பெயரும் உண்டு. சனீஸ்வரர், பொங்கல் முடிந்த சில நாட்களிலேயே அதாவது கடந்த ஜனவரி 17ம் நாளன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சியானார். 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசிக்கு பிரவேசித்துள்ள சனீஸ்வரர், மார்ச் 9 அன்று உதயமாக இருக்கிறார்,

கிரக அஸ்தமனம் மற்றும் உதயம்

சனியின் உதயம் மற்றும் அஸ்தமனம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகும். பொதுவாக கிரகங்களின் உதயம் மற்றும் அஸ்தமனம் ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜனவரி 31 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமனமான சனி பகவான் எதிர்வரும் மார்ச் 9ஆம் தேதி கும்பத்தில் மீண்டும் உதயமாகிறார்.

கும்பத்தில் சனி உதயம்

சனி மீண்டும் கும்பத்தில் உதயமாக உள்ள நிலையில் சில ராசிக்காரர்களுக்கு அருமையான காலம் தொடங்கவிருக்கிறது. சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால், சிலருக்கு மத்திமமான பலன்கள் இருக்கும்.

சனியின் உதயத்தால் பொருளாதாரம் மற்றும் நிதிநிலைமையில் மேம்பட்டு, செல்வச் செழிப்பில் திளைக்கும் சில ராசிகள் இவை.  

மேலும் படிக்க | மேஷத்தில் குரு பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு பம்பர் ஜாக்பாட் லாபம்

சனி உதயத்தால் பண பலன் அடையும் ராசிக்காரர்கள்

மகர ராசி

உங்கள் ஜாதகத்தின் இரண்டாம் பாகத்தில் சனி (Shani Dev Uday) உதயமாக உள்ளார். இதனால் நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு வெற்றி கிட்டும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டு.

சிம்ம ராசி

சனி (Shani Dev Uday) உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் அமர்வது நல்ல பலன்களைக் கொடுக்கும். இதனால் உங்கள் நிதி நிலை மேம்படும். நீங்கள் எந்த புதிய வேலையையும் தொடங்கலாம். ஒரு பெரிய வணிக ஒப்பந்தம் முடிவடையும். உங்களுடன் இணைந்து செயல்படுபவர்களுக்கும் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | பணவரத்து இருந்தாலும் எப்போதும் கையில் பணம் இல்லாமல் தவிக்கும் ராசிகள் 

துலாம் ராசி

சனியின் உதயத்தால் (Shani Dev Uday) வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வணிகம் மற்றும் அரசியலில் தொடர்புடையவர்கள் தங்கள் தொழிலில் புதிய வெற்றியைப் பெறலாம். வீட்டில் குழந்தை பாக்கியம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு திருமணத்திற்கான அதிர்ஷ்டம் கதவைத்தட்டும்.  

ரிஷபம் ராசி

சனியின் உதயம்,  உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோருடன் உறவுகள் மேம்படும். வருமானம் கூடும். புதிய தொழில் தொடங்க முடிவு செய்யலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) 

மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - பணமழையில் நனையப்போகும் ராசிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News