Mohini Ekadasi 2022: நோயற்ற வாழ்வைத் தரும் மோகினி ஏகாதாசி விரதம்

Mohini Ekadasi 2022: வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் விரதம் இருந்து விஷ்ணு பகவானை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும் நோய்களிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 9, 2022, 11:52 AM IST
  • மனதை ஒருநிலைப்படுத்தி நாள் முழுவதும் விரதமிருப்பது மிகவும் விசேஷமானது.
  • எதிர்கால திட்டங்கள் அனைத்தும் பெருமாளின் அருளால் வெற்றி அடையும்.
  • விஷ்ணு பகவான் வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின் போது தான் மோகினி அவதாரம் எடுத்தார்
Mohini Ekadasi 2022: நோயற்ற வாழ்வைத் தரும் மோகினி ஏகாதாசி விரதம் title=

ஏகாதசி என்பது பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. ஏகாதசி திதி, ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. அதில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு `மோகினி ஏகாதசி' என்று பெயர். 

வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் விரதம் இருந்து விஷ்ணு பகவானை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும் நோய்களிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம். உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெரும். இவ்விரதம் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான உதிரப் போக்கு பிரச்சனை தீரும்.

மேலும் உடலில் ரத்த சோகை நீங்கும். உங்கள் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் பெருமாளின் அருளால் வெற்றி அடைந்து சிறப்பான பலன்களை கொண்டு வந்து சேர்க்கும்

விஷ்ணு பகவான் வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின் போது தான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அதனால்தான் இதற்கு `மோகினி ஏகாதசி' என்ற பெயர் வந்தது. இந்த நல்ல நாளில், விரதமிருந்து விஷ்ணு பகவானை வழிபட்டால் இந்தப் பிறவியின் வினைகள் மட்டும் அல்லாது, முந்தைய பிறவியின் வினைகளும் சேர்ந்து அழியும் என்பது ஐதீகம்.

ஏகாதசி திதி தேதி 

2022 ஜூன் 10ம் தேதி (10-06-2022), வெள்ளிக்கிழமை (வைகாசி மாதம் 27, வளர்பிறை, ஏகாதசி)

ஏகாதசி திதி நேரம்

2022 ஜூன் 10ம் தேதி காலை 7.26 மணி முதல், ஜூன் 11 காலை 5.45 மணி வரை

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி 2022: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால், மனித மனம் தூய்மை அடைகிறது, மனதில் உள்ள கோபம், வெறுப்பு, குழப்பம் ஆகியவை விலகி எண்ணங்கள் தூய்மை அடைகின்றன. நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி, வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணலாம். மனதிற்கு இனிய வாழ்க்கையும் அமையும். மனதை ஒருநிலைப்படுத்தி நாள் முழுவதும் விரதமிருப்பது மிகவும் விசேஷமானது.

விரதத்தின் போது பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து கடவுள் சிந்தனையுடன் இருக்க வேண்டும். மகா விஷ்ணு குறித்த ஸ்தோத்திரங்களை கூறுவதும், பாடல்கள் இசைப்பதும் மனதிற்கு பெரும் நிம்மதியைத் தரும். 

ஏகாதசி விரதம் இருக்கும் நாளில், கேளிக்கை அல்லது விருந்து போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகளுடன் கூடவே, மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். அன்று முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. எனினும், உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்த பழங்களை சாப்பிடலாம். அவ்வப்போது தாகம் தீர்க்க தண்ணீரும் குடிக்கலாம்.

விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. காலி வயிற்றில் தண்ணீர் குடுக்கும் போது அது வயிற்றையும் சுத்தமாக்குகிறது.

ஏகாதசி விரதத்தின் மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, ஏழைகளுக்கு அன்னதானம் அளித்த பிறகு, அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவு அருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்துவது மிகவும் சிறப்பு. 

மேலும் படிக்க | ஏழரை சனியிலும் சனிபகவானின் அருளை பெற ‘இவற்றை’ செய்யுங்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News