ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் அரபிகுத்து பாடலுக்கு நடனமாடிய கத்ரீனா கைஃப் -வீடியோ வைரல்

Katrina Kaif Dance Video: பிரபல நடிகை கத்திரீனா கைப் உசிலம்பட்டி அருகே தனது பள்ளியில் மழலைகளுடன் உற்சாகமாக அரபிகுத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 26, 2022, 04:21 PM IST
  • பள்ளி மழலைகளுடன் தளபதி விஜய்யின் அரபிக்குத்து பாடலுக்கு நடனம்.
  • விஜய் சேதுபதியுடன் கத்ரீனா "மெர்ரி கிறிஸ்மஸ்" படத்தில் நடித்து வருகிறார்.
  • டைகர் 3 (Tiger 3) படத்தில் சல்மான் கானுடன் மீண்டும் இணையவுள்ளார்.
ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் அரபிகுத்து பாடலுக்கு நடனமாடிய கத்ரீனா கைஃப் -வீடியோ வைரல் title=

Katrina Kaif Dance Video: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் அமைந்துள்ள தனியார் பள்ளிக்கு பங்குதாரராக உள்ள பிரபல நடிகை கத்திரீனா கைப். கடந்த சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். தனது வருகையால் பள்ளி மாணவர்களை நடிகை கத்ரீனா கைஃப் ஆச்சரியப்படுத்தினார். அப்போது பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நடத்திய கலை நிகழ்ச்சியை கண்டு கழித்த நடிகை கத்திரீனா கைப், பள்ளி மழலைகளுடன் தளபதி விஜய்யின் அரபிக்குத்து பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினார். அவர் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் "இது ஆரோக்கியமான விஷயம்" என்று அவரை பாராட்டி வருகின்றனர்.

நடிகர் விஜய்-யின் பீஸ்ட் படத்திலிருந்து இரு பாடலுக்கு கத்தரீனா கைப் உற்சாகமாக நடனமாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க: நடிகை கத்ரீனாவுடன் தவறாக நடந்துகொண்ட ரசிகர்கள்- வைரல் வீடியோ

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியுடன் "மெர்ரி கிறிஸ்மஸ்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை "அந்தாதூன்" என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுக்குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் படக்குழு தரப்பில் இருந்து கூறப்படவில்லை. ஏற்கனவே நடிகை கத்ரீனா கைஃப் "மெர்ரி கிறிஸ்மஸ்" படம் தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"மெர்ரி கிறிஸ்மஸ்" படத்தை தொடர்ந்து ஹாரர்-காமெடி படமான "போன் பூத்" (Phone Bhoot) படத்தில் கத்ரீனா நடித்து வருகிறார். இது நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகிறது. இந்தி நடிகர்களான இஷான் கட்டர் மற்றும் சித்தாந்த் சதுர்வேதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது தவிர, கத்ரீனா தனது வசம் பல படங்களை வைத்துள்ளார். டைகர் 3 (Tiger 3) படத்தில் சல்மான் கானுடன் மீண்டும் இணையவுள்ளார்.

மேலும் படிக்க: Merry Christmas திரைப்படத்தில் காத்ரீனா கைஃபுடன் இணையும் விஜய் சேதுபதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News