வேலையே செய்யலனாலும் ஓவரா வியர்வை வருதா..அப்போ உங்கள் உடலுக்கு இந்த பிரச்சனை வரலாம்!

வருவதும் தீயது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் உடலுக்கு போதுமான வியர்வை அளவு என்பது உள்ளது. இந்த அளவை மீறி அடிக்கடி வியர்வை வந்துகொண்டே இருந்தால் உடலுக்கு இந்த பிரச்சனைகள் வரலாம் என்று கூறுபடுகிறது.

வெயிலில் அதிகம் சுற்றுபவர்கள் முதல் உடலுக்கு அதிகமான உழைப்பைக் கொடுப்பவர்கள் வரை வியர்வை என்பது சாதாரணமான ஒன்று. ஆனால் வியர்வை வேலையே செய்யாமல் வந்தால் அதனை ஆபத்து என்று சொல்லப்படுகிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

 

1 /8

உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க வியர்வை பங்கு இன்றியமையாத ஒன்று. அந்தவகையில் சிலருக்கு மன அழுத்தம், உடற்பயிற்சி, சுரப்பி மாற்றங்கள், மது அருந்துதல் மற்றும் மருந்துகள் சாப்பிடுபவர்கள் ஆகியோருக்கு வியர்வை வரும் என்று கூறுபடுகிறது.

2 /8

உடலில் அதிகமான வெப்பம் இருந்தால் அதனைக் குறைக்க வியர்வை வரத் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. வியர்வை என்பது நம் உடலில் இருக்கும் தண்ணீர் மற்றும் பிற சோடியம் போன்ற பிற தாதுகள் வியர்வையை உற்பத்தி செய்து இறுதியில் வியர்வை தோலில் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.  

3 /8

வியர்வை உடலில் இருக்கும் தகாத நச்சு பாக்டீரியாக்கள் மற்றும் பிற கிருமிகளை வெளியேற்ற உருவாகும். மேலும் இது உடலை ஆரோக்கியப்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது.

4 /8

அதிக  பதட்டம் மற்றும் அதிகமான மன அழுத்தம் உணரும் போது பதட்டத்தில் வியர்வை உண்டாகும். உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றமாக மாறி அது நோய்த் தொற்றாக உருவாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

5 /8

உடற்பயிற்சி செய்யும்போது உடலில் அதிகமான வியர்வை சுரக்கும். இது உடலில் சோடியத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது.   

6 /8

காஃபின் இது வியர்வையைச் சுரக்கும் சுரப்பி செயல்பாடுகளை அதிகரிக்கிறது. இதனால் காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு அதிகமான வியர்வை சுரப்பதைக் காணலாம். அப்படி அதிகமான வியர்வை சுரப்பதை அறிந்தால் காபி குடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

7 /8

பொதுவாக வியர்வை சாதாரணமாக வரும். அதே அதிகமாக வந்தால் உடலுக்கு நீரிழிவு நோய், தைராய்டு செயலிழிப்பு, இதய நோய் மற்றும் மாதவிடாய் போன்றவற்றில் சில பிரச்சனைகள் வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

8 /8

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)