அதிக குறட்டையை அப்படியே குறைக்கும் 7 யோகாசனங்கள்! கண்டிப்பா காலையில் பண்ணுங்க..

Yoga Asanas To Control Your Snoring : பலருக்கு, குறட்டை பிரச்சனை என்பது தீர்க்க முடியாததாக இருக்கிறது. இதனை, எப்படி குறைக்க வேண்டுமென தெரியுமா?

Yoga Asanas To Control Your Snoring : இரவில் நிம்மதியாக உறங்க, நாமும் நம்மை சுற்றி இருப்பவர்களும் கொஞ்சம் அமைதியாக உறங்க வேண்டியது அவசியம். பெரும்பாலும், ஆண்கள்தான் இந்த குறட்டை பிரச்சனையால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதை குறைக்க, சில உடற்பயிற்சிகளும் யோகாசனங்களும் உதவும். அவை என்னென்ன தெரியுமா?

1 /7

புஜங்காசனா ஆசனத்தை, கோப்ரா போஸ் என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். எப்படி செய்ய வேண்டும்? முதலில் குப்புற படுத்து நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும். கால்களை நன்றாக நீட்டி, முகத்தை மேற்புறமாக தூக்க வேண்டும். இப்படியே 20-30 வினாடிகள் நிற்க வேண்டும்.

2 /7

சிம்ஹாசனா பயிற்சி செய்முறை: மூச்சுப்பயிற்சி செய்ய அமர்வது போல முதலில் அமர வேண்டும். பின்பு கைகளை விரித்து வைத்து நாக்கை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளியே தள்ள வேண்டும் வாயை நன்றாக திறந்து ‘ஹா’ என மூச்சு விட வேண்டும். இப்படியே 5-10 முறை செய்ய வேண்டும். 

3 /7

பிராமரி பிராணாயமம் ஆசனம் செய்வது எப்படி? முதலில் தரையில் அமர வேண்டும். கட்டை விரலால் கண்களை மூடி, கொஞ்சமாக அழுத்த வேண்டும் மூக்கால் மூச்சை இழுத்து விட வேண்டும். இப்படி 5-7 முறை செய்ய வேண்டும்.

4 /7

உஜ்ஜய் ப்ராணாயாமம் எப்படி செய்வது? தரையில் அமர்ந்து, கைகளை முன்னாள் கூப்பி மூக்கால் மட்டும் மூச்சை இழுத்து விட வேண்டும். இப்படி 5-10 முறை செய்ய வேண்டும். 

5 /7

தனுராசனா எப்படி செய்வது? முதலில் குப்புற படுத்து நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும். கால்களை கைகளால் பிடித்து 15-20 விநாடிகள் அப்படியே தாக்கு பிடிக்க வேண்டும்.

6 /7

சேது பந்தாசனா எப்படி செய்வது? இதனை ஆங்கிலத்தில் ப்ரிட்ஜ் போஸ் என்பர். முதலில் சாதாரணமாக தரையில் படுத்து கால்களை மடக்க வேண்டும். இரு கைகளையும் இரு புறமும் வைத்து, நேராக பார்த்து இடுப்பை மேற்புறம் தூக்க வேண்டும்.  இப்படி 20-30 வினாடிகள் நிற்க வேண்டும்.

7 /7

நாடி சோதனா ப்ராணாயமம் செய்வது எப்படி? நேராக அமர்ந்து கண்களை மூடி மூச்சை நன்றாக இழுத்து விட்டு, உடலை ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.  ஒரு நாசியால் மூச்சை இழுத்து, இன்னொரு நாசியால் மூச்சை வெளியேற்ற வேண்டும். இப்படி, 5-10 முறை செய்ய வேண்டும்.