பணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட் புக் செய்யலாம் - எப்படி?

Train Ticket Booking | இந்திய ரயில்வேத்துறை பணம் செலுத்தாமல் ஒருவர் ரயில் டிக்கெட் புக் செய்யும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 24, 2025, 09:03 PM IST
  • ரயில் டிக்கெட் புக்கிங் புதியமுறை
  • பணம் செலுத்தாமல் டிக்கெட் புக் செய்யலாம்
  • ரயில் டிக்கெட் புக்கிங் சூப்பர் டிப்ஸ்
பணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட் புக் செய்யலாம் - எப்படி? title=

Train Ticket Booking | இந்திய ரயில்வே ஒரு சூப்பரான திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் ரயில் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். புக் செய்த ரயில் டிக்கெட்டுக்கான தொகையை பின்னர் செலுத்தலாம். இந்த ஆப்சனை எப்படி பயன்படுத்துவது? பைசா செலவில்லாமல் ரயில் டிக்கெட் புக் செய்து கொள்வது எப்படி? என்பது உள்ளிட்ட இந்த முக்கிய அம்சத்தின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியா முழுவதும் நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் ரயில் பயணம் மூலம் எளிமையாக சென்றடைந்து விட முடியும். குறைந்த கட்டணத்தில் இந்தியா முழுமைக்கும் செல்ல ஒரு சூப்பரான பயண சேவையை வழங்கி வருகிறது இந்திய ரயில்வே துறை. குறிப்பாக பயணிகளின் சௌகரியங்களை மேம்படுத்தும் வகையில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வது முதல் ரயிலில் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வது வரை என பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் ரயில் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டு பின்னர் பணம் செலுத்துவது ஆகும். அதாவது ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது உங்களிடம் பணம் இல்லை என்றாலும் டிக்கெட் புக் செய்துவிட்டு, அதற்கான தொகையை பின்னர் செலுத்திக் கொள்ளலாம்.

அவசர தேவைகளுக்கு பயணம் செய்பவர்கள், சீட் கன்பார்ம் செய்ய வேண்டிய நெருக்கடியில் இருப்பவர்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் இந்திய ரயில்வே வைத்திருக்கும் இந்த திட்டம் சூப்பரான அனுபவத்தை கொடுக்கக்கூடியது. டிக்கெட் புக் செய்ததில் இருந்து சுமார் 14 நாட்களுக்குப் பிறகு கூட நீங்கள் கட்ட வேண்டிய கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம். அதற்கு இந்திய ரயில்வே துறையின் “Book Now, Pay Later” ஆப்சனை பயன்படுத்த வேண்டும். 

இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்தாமல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து 14 நாட்களுக்குள் டிக்கெட்டின் முழுத் தொகையையும் செலுத்தலாம். நீங்கள் சரியான நேரத்தில் பணம் செலுத்தினால், கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. இருப்பினும், பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், நீங்கள் 3.5% சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்திய ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி?

இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, நீங்கள் முதலில் உங்கள் IRCTC கணக்கில் உள்நுழைய வேண்டும். இதற்குப் பிறகு, "BOOK NOW” விருப்பத்தைக் கிளிக் செய்து பயணிகளின் தகவலை நிரப்பி சமர்ப்பிக்கவும். இதற்குப் பிறகு கட்டணப் பக்கம் திறக்கும். இங்கே கிரெடிட்/டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது BHIM செயலி மூலம் பணம் செலுத்தும் விருப்பத்தைப் பெறுவீர்கள். இந்திய ரயில்வே “Book Now, Pay Later” என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். இதன்மூலம் பணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யலாம். 

மேலும் படிக்க | ரயில் பயணம் இலவசம்! 365 நாட்களும் டிக்கெட் எடுக்க தேவையில்லை - பயணிகளுக்கு குட் நியூஸ்

மேலும் படிக்க | Indian Railways | ரயில் டிக்கெட் புக்கிங் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த 5 புதிய விதிமுறைகள்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News