தாய்ப்பால் சுரக்க இந்த உணவை சாப்பிடுங்க..குழந்தைகளுக்கு தாய்ப்பால் நிறையக் கிடைக்கும்!

கர்ப்பிணிப் பெண்கள் தங்களது கர்ப்ப மாதத்தில் உணவுகள் பாதுகாப்பாகச் சாப்பிட வேண்டும். அந்தவகையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாகக் குழந்தைகளுக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்க உணவுகள் சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது ஒரு இன்றியமையான் உணவு என்றே சொல்லலாம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிகராக வேறு எந்தவொரு உணவும் ஈடில்லை. சில இளம் தாய்மார்களுக்குப் பால் சுரப்பதில் பெரிய சிரமம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் இந்த உணவுகளைச் சாப்பிட்டால் தாய்ப் பால் நன்றாகச் சுரக்கும் என்று கூறுகின்றனர். 

 

1 /9

ஒவ்வொரு தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட காலம் வரை தாய்ப்பால் கொடுப்பர். சிலர் டெக்னாலாஜிக்கு உட்பட்டு தாய் பால்களை வேறுவிதத்தில் குழந்தைகளுக்குக்கொடுத்துவருகின்றனர். 

2 /9

குழந்தைகளுக்கு தாய்ப்பால் தாய்மார்களே கொடுப்பது சிறந்தது என்று கூறுகின்றனர். ஏனென்றால் குழந்தைகள் தாய்மார்களிடம் தாய்ப்பால் குடிக்கும்போது அவர்களுக்கு உடல் ஆரோக்கியம் பலமடங்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  

3 /9

வளர்ந்து வரும் நவீனம் உலகில் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவு முறையை மாற்றுகின்றனர். உணவு முறை மற்றும் உணவு நேரம் இரண்டும் மிகவும் முக்கியமானது. சிலர் மோசமான உணவுப் பழக்கங்களை எடுத்துக்கொள்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் தாய்ப்பால் சுரப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.

4 /9

தாய்மார்கள் பிரசவ காலத்திற்குப் பின் காஃபின், சாக்லெட் மற்றும் காரணமான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள். தாய்மார்கள் பாலூட்டும் காலத்தில் ப்ரோக்கோலி, காலிஃப்பிளவர் மற்றும் வெள்ளரி உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிட வேண்டாம். இந்த உணவுகள் வயிற்றுக்கு சில அபாயத்தை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.   

5 /9

இளம் தாய்மார்களுக்கான டயர்ட்: குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை உங்கள் உணவில் தினமும் பூண்டைச் சேர்த்துச் சாப்பிடவும். இதில் நோய் எதிர்ப்புச்சக்தி உள்ளடங்கியுள்ளது. இதனை நீங்கள் அன்றாடம் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு அதிகமான தாய்ப்பால் கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

6 /9

பூண்டு நன்மைகள்: பூண்டு சாப்பிடுவதால் தாய்மார்களுக்குப் பால் உற்பத்தி பலமடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அனைத்து வீட்டிலும் சமையலுக்குப் பயன்படுத்தும் இன்றியமையா உணவுப் பொருள் இது. இப்படிப்பட்ட உணவுப் பொருளை எளிதாகக் கிடைக்கின்றனர். இதனைத் தாய்மார்கள் தினமும் சாப்பிட்டு வாருங்கள். உங்கள் குழந்தைக்கு நிறைய தாய்ப்பால் கொடுக்கலாம்.  

7 /9

உங்கள் ருசிக்கேற்ப பூண்டை வைத்து எப்படி வேண்டுமானாலும் சமைத்துச் சாப்பிடுங்கள். தேவையான அளவுடன் சமைத்து தினமும் சாப்பிட்டு வாருங்கள். தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.  

8 /9

பூண்டு சாப்பிடுவதால் தாய்ப்பால் சுரப்பதோடு, கூடுதலாக உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியும் அதிகரிக்கும். மேலும் இருமல் மற்றும் சளி இருப்பவர்களும் இதனைச் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.  

9 /9

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)