MGR-ஆக அரவிந்த் சுவாமி.. ஜெயலலிதாவாக கங்கனா.. வெளியானது 'தலைவி' தோற்றம்!

MGR-யின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தலைவி படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2021, 11:36 AM IST
MGR-ஆக அரவிந்த் சுவாமி.. ஜெயலலிதாவாக கங்கனா.. வெளியானது 'தலைவி' தோற்றம்! title=

MGR-யின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தலைவி படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் (Jayalalithaa) வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் ‘தலைவி’ (Thalaivi) என்ற திரைப்படத்தை உருவாகி வருகின்றனர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும் (Kangana Ranaut), MGR வேடத்தில் அரவிந்த் சாமியும் (Arvind Swami) நடித்துள்ளனர். 

சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், MGR-யின் 104-வது பிறந்தநாளான இன்று வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ள தலைவி படக்குழு, அதோடு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. எம்.ஜி.ஆராக நடித்துள்ள அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக நடித்துள்ள கங்கனாவும் ரொமாண்டிக் போஸ் கொடுத்தபடி இருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ | MGR நினைவு நாளில் வைரலாகும் அரவிந்த் சாமியின் MGR Look!

இந்தப் படத்தை கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். இதுபற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான, பிருந்தா பிரசாத் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது.

ஐதராபாத்தில் செட் அமைத்து நடந்து வந்த இதன் படப்பிடிப்பு, கடந்த மாதம் நிறைவடைந்தது. இதுபற்றி ட்விட்டரில் தெரிவித்த கங்கனா, 'வெற்றிகரமாக, எங்கள் கனவுத் திரைப்படமான தலைவி ஷூட்டிங்கை முடித்து விட்டோம். எந்த நடிகைக்கும் எளிதில் கிடைத்திடாத, அரிதான ரத்தமும் சதையுமான கேரக்டர் எனக்கு கிடைத்தது' என்று கூறியிருந்தார்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News