பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தாலே மன அழுத்தம் போய், மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். அவை எழுப்பும் சத்தம், அவற்றின் செல்லமான கீச்சு குரல், பறக்கும் அழகை பார்த்துக் கொண்டிருந்தாலே நேரம் போவதே தெரியாது. மனிதர்களை போலவே பறவைகள் தங்கள் துணையிடம் காட்டும் காதல் அதீதமானது என்பதை சமீபத்தில் வைரலாகும் இந்த வீடியோ உணர்த்துகிறது. மனதிற்கு இதமான பறவைகளின் அல்லது விலங்குகளின் காதலின் ஆழத்தை ப்புரிய வைக்கும் வகையிலான வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அந்த வகையில் பறவைகளின் காதலின் ஆழம் விவரிக்கும் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.
காதல் அல்லது அன்பு என்றல் என்ன? நீங்கள் பார்க்கவிருக்கும் இந்த வீடியோ, ஒருவேளை, அதன் உண்மையான அர்த்தத்தை உங்களுக்குக் கற்பிக்கும். இந்திய வன சேவை அதிகாரி சுசந்த நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், பறவை ஒன்று இறந்த தனது துணையின் விட்டு விலக மறுப்பதைக் காட்டுகிறது. வீடியோ முற்றிலும் மனதை உருக்கும் வகையிலும், கண்ணீரை வரவழைக்கும் வகையிலும் உள்ளது.
பறவை தனது துணையின் மரணத்தை தாங்க முடியாமல் தவிப்பதை வீடியோ காட்டுகிறது. ஒரு மனிதன் இறந்த பறவையை நகர்த்த முயற்சிக்கும்போது, மற்றொன்று அதை விடாமல் அதைப் பற்றிக் கொள்கிறது. அதன் அருகில் சென்று அதன் முகத்தை தனது முகத்தை வைத்திக் கொள்கிறது. சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது, தனது துணையின் இறப்பை தாங்க முடியாமல் அதும் இறந்துவிட்டதை நீங்கள் காணலாம். யாரோ ஒருவர் அவற்றை ஒன்றாக புதைப்பதைக் காணலாம்.
மனதை உருக்கும் காதல் பறவை வீடியோ:
Love & Loyality
If you have a heart, it will surely bleed at the end pic.twitter.com/FqnwThjOpi— Susanta Nanda (@susantananda3) June 21, 2023
இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இணையத்தில் எண்ணிடங்காத வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அவை நம அறியாத விலங்குகளின் வாழ்க்கையையும், பறவைகளின் வாழ்க்கையையும் எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றன. வன விலங்குகள், பறவைகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில பார்ப்பவர்களுக்கு பீதியை ஊட்டுவதாகவும், சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். இணைய உலகில் பகிரப்படும் தகவல்கள் மூலம் பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன.
மேலும் படிக்க | Viral Video: காதலியை கவர போட்டியிடும் ஆண் பறவைகள்... மசியாத பெண் பறவை!
இந்த வீடியோவைப் போல் மயிலின் காதல் உணர்வை விவரிக்கும் வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன் வைரலானது. ஆனால், மயிலில் வீடியோ உங்களுக்கு சந்தோஷ உணர்வை கொடுக்கக் கூடியது. மயிலின் வண்ணம், விசிறி போன்ற வால், நீண்ட வடிவான இறகுகள், இணையைக் கவர அவைகள் ஆடும் அற்புத நடனம் என பார்ப்பவர்களை எப்போதும் பிரம்மிக்க வைக்கும். பெண் மயிலை கவர்வதைத் தவிர மழை வரும் முன்னரும் மயில்கள் தோகை விரித்து நடனமாடும். சில சமயங்களில் எதிரிகளை அச்சுறுத்தவும் தோகையை விரித்து, வேகமாக அசைத்து, ஒலி எழுப்பி பயமுறுத்தும். அந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்க | Viral Video: ஆண் மயிலின் அற்புத ஒயிலாட்டம்... மனம் இரங்காத பெண் மயில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ