நடிகை ஜெனிலியா கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் லுக்-கை பார்த்து உனக்கு வயசே ஆகாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்!!
அடங்க மறு படத்திற்கு பிறகு ஜெயம் ரவி, நடித்து வரும் கோமாளி படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி வருகிறார். காமெடி படமான இதில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே யோகி பாபு, கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஐசரி தயாரித்து வரும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். இதில் ஜெயம் ரவி 9 கதாப்பாத்திரங்களில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்த அடிமை, ஆதிவாசி, 1990களில் வாழ்ந்த இளைஞர், ராஜா ஆகிய வேடங்களை உறுதிசெய்த படக்குழுவினர், மீதமுள்ள 5 வேடங்களை ரகசியமாக வைத்துள்ளனர். இதற்காக ஜெயம் ரவி 18 கிலோ எடையை குறைத்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில், கோமாளி படத்தின் 9 லுக் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. படத்தை பிரபலப்படுத்தும் விதமாக தினமும் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. இதுவரை 8 போஸ்டர்கள் வெளியான நிலையில் நேற்று 9-வது போஸ்டர் வெளியானது . இந்த போஸ்டரை ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பகிர்ந்து, ’ஜெயம் படத்திற்கு முன்னால் ரவியை பார்த்தது போல் இருக்கிறது’ என்று பதிவிட்டிருந்தார்.
What is this @actor_jayamravi ???? You are not aging at alll... You Look like a teenager all over again.. Good Luck https://t.co/aEUfly5LvE
— Genelia Deshmukh (@geneliad) May 26, 2019
இயக்குநர் மோகன் ராஜாவின் இந்த பதிவுக்கு நடிகை ஜெனிலியா கமெண்ட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘ உனக்கு வயசே ஆகாதா. இத்தனை ஆண்டுகள் கழித்தும் இளைஞன் போல தோற்றமளிக்கிறீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.