ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த நடிகர் சிம்பு -புகைப்படம் உள்ளே!

Last Updated : Jul 8, 2018, 03:45 PM IST
ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த நடிகர் சிம்பு -புகைப்படம் உள்ளே!  title=

இயக்குநர் ராதாமோகன் தற்போது இயக்கி வரும் காற்றின் மொழி படத்தில் ஜோதிகாவுடன் இணையும் சிம்பு! 

கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்பு - ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் மன்மதன். இத்திரைப்படம் பயங்கர ஹிட்டானது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்புவுடன் ஜோதிகா நடித்து வருகிறார். இப்படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இதையடுத்து, ஜோதிகாவை வைத்து மொழி படத்தை இயக்கிய இயக்குநர் ராதாமோகன் தற்போது இயக்கி வரும் காற்றின் மொழி படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இப்படத்தில் ஜோதிகாவுக்கு கணவராக விதார்த் நடிக்கிறார். இவர்களுடன் மேலும்எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில் இந்தியில் வெளியான ’துமாரி சுலு’ படத்தின் ரீமேக்காக காற்றின் மொழி உருவாகிறது. போஃப்டா மீடியா சார்பாக தனஞ்செயன் இப்படத்தை தயாரிக்கிறார்.

 

Trending News