சென்னை: திரையரங்குகளில் புதிய விதிகளைப் பின்பற்றும்படி அறிக்கை ஒன்றை நேற்று நடிகர் விஷால் வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று, ’திரையரங்க உரிமையாளர் சங்கம்’ பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பில் பேசிய அபிராமி ராமநாதன் கூறியதாவது:-
திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயர்வு, கேளிக்கை வரி குறைப்புக்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
நேற்று விஷால் வெளியிட்ட அறிக்கை சற்று வருத்ததினை அளிக்கின்றது. திரையரங்க உரிமையாளர்களுக்கும் சங்கம் இருக்கின்றது, திரையரங்க உரிமையாளர்கள் சம்மந்தப்பட்ட முடிவினில் திரையரங்க உரிமையாளர்களை ஆலைசிக்காமல் அறிக்கை வெளியிட்டது, கட்டளையிடுவது போல் உள்ளது.
எங்களிடம் கலந்தாலோசிக்காமல் விஷால் எடுத்த முடிவு வருத்தமளிக்கிறது .
தியேட்டர்களில் அம்மா குடிநீர் பாட்டில்களை விற்பதற்கு தயாராக இருக்கின்றோம்.
இணையதளத்தில் முன்பதிவு செய்யும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.