Kudumbasthan Trailer : ‘குடும்பஸ்தன்’ பட டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு!

Kudumbasthan Trailer : குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 

Written by - Yuvashree | Last Updated : Jan 19, 2025, 05:29 PM IST
  • மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம்
  • மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு
  • டிரைலரை இங்கு பாருங்கள்..
Kudumbasthan Trailer : ‘குடும்பஸ்தன்’ பட டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு! title=

Kudumbasthan Trailer : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வளர்ந்து வரும் மணிகண்டனின் குடும்பஸ்தன் டிரைலர் நேற்று வெளியானது. இதற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்து வருகின்றனர். 

டிரைலர்:

குடும்பஸ்தன் படம், எப்போதும் போல வித்தியாசமான குடும்ப காமெடி டிராமாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மணிகண்டனும் கலகலவென்ற தோற்றத்தில் நடித்திருக்கிறார். 

நடிகர் மணிகண்டன் இந்த டிரைலர் குறித்து பேசுகையில், “இரண்டரை வருஷத்திற்கு முன்பு ராஜேஷை இந்தக் கதைக்காக சந்தித்தேன். ‘குட்நைட்’, ‘லவ்வர்’ படம் ஏற்கனவே ஒத்துக் கொண்டதால் இந்தப் படத்தில் நான் நடித்தாக வேண்டும் என காத்திருந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. முதலில் இயக்குநர் ராஜேஷ் ஒரு அட்வென்ச்சர் கதை எழுததான் நினைத்தார். பிறகு இன்றைய தேதியில் ஒரு குடும்பம் நடத்துவதே பெரிய அட்வென்ச்சர் என்பதால் அதையே படமாக்கியிருக்கிறார். பார்வையாளர்களுக்கும் பல வழியில் இது கனெக்ட் ஆகும். குரு சோமசுந்தரத்தின் ‘பாட்டல் ராதா’ படமும் ‘குடும்பஸ்தன்’ படத்தோடு வருகிறது. நான் ஒரு படம் பார்த்து எமோஷனல் ஆகி அழுவது அரிது. அது ’பாட்டல் ராதா’ படத்தில் நடந்திருக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள். ‘குடும்பஸ்தன்’ படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கொங்கு தமிழை நக்கலைட்ஸ் டீம் எனக்கு பயிற்சி கொடுத்தார்கள். பிரசன்னா சார் எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். 

டெக்னிக்கல் டீமும் கஷ்டப்பட்டு சிறப்பாக செய்திருக்கிறார்கள். கோபப்படாத கனிவான தயாரிப்பாளர் வினோத். எங்கள் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி சார். என் வாழ்க்கையில் அதிக சண்டை போட்ட நபர்களில் இயக்குநர் ராஜேஷூம் ஒருவர். அது எல்லாம் படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காகதான். அதை சரியான விதத்திலும் அவர் புரிந்து கொண்டார். சினிமாவில் சின்ன பெயர் எடுக்கவே பெரிய உழைப்பு தேவையாய் இருக்கிறது. நான் செய்த சின்ன வேலைகளுக்கு எல்லாம் பெரிய பாராட்டு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படமும் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, “இது என்னுடைய குடும்ப விழா. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்கு ஒரு தயாரிப்பாளரிடம் கதை துல்கர் டேட் வாங்கி வேலை ஆரம்பிக்க இருந்த சமயத்தில் அந்தத் தயாரிப்பாளர் படத்தில் இருந்து விலகினார். அந்த சமயத்தில் எனக்கு பக்கபலமாக இருந்தது வினோத் சாரும் குமார் சாரும்தான். அந்தப் படம் நான் நினைத்த மாதிரி வந்ததற்கு காரணம் வினோத் சார்தான்.  அவர் எடுத்திருக்கும் படம்தான் ‘குடும்பஸ்தன்’. யதார்த்தமான கதை இது. எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நிச்சயம் உங்கள் ஆதரவு தேவை” என்றார். 

 

மேலும் படிக்க | ஓடிடியில் இன்று வெளியான விடுதலை 2!! எந்த தளம் தெரியுமா?

மேலும் படிக்க | ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் - பா ரஞ்சித் ஆவேசம்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News