மெட்ரோவில் எடுத்து செல்லப்பட்ட இதயம்! மருத்துவர்கள் எடுத்த திடீர் முடிவு..என்னாச்சு?

Medical Crew Took Heart In Metro Train : மருத்துவர் குழு ஒன்று, இதயத்தை மெட்ரோவில் எடுத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

Written by - Yuvashree | Last Updated : Jan 18, 2025, 11:43 AM IST
  • மெட்ரோவில் இதயத்தை எடுத்து சென்ற மருத்துவர்கள்!
  • 13 நிமிடங்களில் 13 கி.மீ..
  • ஏன் இந்த முடிவு?
மெட்ரோவில் எடுத்து செல்லப்பட்ட இதயம்! மருத்துவர்கள் எடுத்த திடீர் முடிவு..என்னாச்சு? title=

Medical Crew Took Heart In Metro Train : உடல் உறுப்பு தானம் நடைபெறும் சமயங்களில் தானம் கொடுப்பவர்களின் இடத்திலிருந்து தானம் பெறுபவரின் இடத்திற்கு விமானம் அல்லது ஆம்புலன்ஸ்கள் மூலம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.  ஆனால் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது இதயத்தை மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாக டாக்டர்கள் எடுத்துச் சென்ற சம்பவம், பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

உடல் உறுப்பை எடுத்து செல்ல பிரத்யேக பெட்டி:

இந்தியாவிலேயே அதிகம் வாகன நெரிசல் ஏற்படும் இடங்களுள் ஒன்றாக உள்ளது. ஹைதராபாத். இதனால், வேலைக்காக அலுவலகத்திற்கு செல்பவர்களில் இருந்து, அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்பவர்கள் வரை, பலர் பொது போக்குவரத்தான மெட்ரோ ரயிலில் தஞ்சம் அடைகின்றனர். இதில், Green Corridor என ஒரு பிரத்யேக பெட்டி உள்ளது. இதனை, பெரும்பாலும் மருத்துவர் குழு பயன்படுத்துகின்றனர். வாகன நெரிசலால் உயிர்கள் போகாமல் தடுப்பதற்காகவும், சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உரிய நேரத்தில் அதனை அளிப்பதற்காகவும் இந்த முடிவை மெட்ரோ ரயில் நிர்வாகமும், மருத்துவர் குழுவும் சேர்ந்து எடுத்திருக்கின்றனர்.

13 நிமிடத்தில் 13 கிலோ மீட்டர்கள்..

ஹைதராபாத்தில் உள்ள எல்பி நகர் பகுதியில் காமினேனி என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கிருந்து லக்டி-கா-புலில் உள்ள க்ளினிகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிடலுக்கு உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட இதயத்தை கொண்டு செல்ல டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, கடந்த ஜனவரி 17ஆம் தேதி (நேற்று) காலை 9:30 மணியளவில், இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக இதயத்தை எடுத்துக்கொண்டு மருத்துவர் குழு பயணித்து இருக்கின்றனர். LB நகரில் உள்ள காமினேனி மருட்துவமனையில் இருந்து, லக்டி-கா-பால் எனப்படும் இடத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு இந்த இதயம் எடுத்து வரப்பட்டுள்ளது. இதற்கான இடைப்பட்ட தூரம், 13 கிலோ மீட்டர்கள் ஆகும். இதனை, 13 நிமிடங்களில் மருத்துவர் குழு கடந்து, ஒரு உயிரை காப்பாற்றி இருக்கின்றனர். இதனால் இவர்களுக்கு, பாராட்டுகள் குவிந்து வருகிறது.

2022-ல் நடந்த சம்பவம்!

2022ஆம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது. அப்போது, ஹைதராபாத், ஜூப்லி மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்கள், நாகோல் என்ற இடத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு இதயத்தை கொண்டு செல்ல மெட்ரோவை பயன்படுத்தினர். இதற்கான இடைப்பட்ட தூரம், 21 கிலோ மீட்டர்கள் ஆகும் இந்த தூரத்தை மருத்துவர்கள் சுமார் 25 நிமிடங்களில் கடந்து சென்றுள்ளனர். அங்கு, இருதய மாற்று அறுவை சிகிச்சையும் வேகமாக முடிக்கப்பட்டு, உயிரும் காப்பாற்றப்பட்டது.

கிரீன் காரிடார் என்றால் என்ன? 

கிரீன் காரிடார் திட்டம் முதலில் சென்னையில்தான் உருவாக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு, 9 வயது பெண் குழந்தையின் உயிரை காப்பாற்ற இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டி இருந்தது. இதற்காக சாலை வழியே இதயத்தை வெகு விரைவில் இதயம் எடுத்து செல்லப்பட்டது. இதனை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு, பிற மாநிலங்களும் உடல் உறுப்புகளை எடுத்து செல்வதற்காக பிரத்யேக சாலை பாதைகளை உருவாக்கின. இந்த திட்டத்திற்கு கிரீன் காரிடார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | மருமகளை திருமணம் செய்த மாமனார்! விரக்தியில் துறவியான மகன்..வைரல் செய்தி..

மேலும் படிக்க | 4 நாளில் திருமணம்... மகளின் மார்பிலேயே சுட்ட தந்தை - அதிர்ச்சி பின்னணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News