பட்டப்பகலில் பெண்ணை வெட்டிக்கொன்ற நபர்! பலரும் வேடிக்கை பார்க்கும் காட்சி..வைரல் வீடியோ

Pune Woman Murdered At Office Parking Viral Video : சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண்ணை ஒருவர் கொலை செய்கிறார். அதனை சிலர் பார்த்தும் தடுக்காமல் இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Yuvashree | Last Updated : Jan 18, 2025, 04:40 PM IST
  • பட்டப்பகலில் பெண்ணை கொன்ற நபர்..
  • யாரும் உதவிக்கு வராத அவலம்..
  • அதிர்ச்சியளிக்கும் வைரல் வீடியோ..
பட்டப்பகலில் பெண்ணை வெட்டிக்கொன்ற நபர்! பலரும் வேடிக்கை பார்க்கும் காட்சி..வைரல் வீடியோ title=

Pune Woman Murdered At Office Parking Viral Video : நம்மை சுற்றி சில சம்பவங்கள் நடைபெறும் போது, “எங்கே சென்றது மனிதநேயம்?” என நமக்கு கேட்க தோன்றும். அப்படிப்பட்ட வீடியோக்களுள் ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு நபர், பட்டப்பகலில், பலரது முன்னிலையில் ஒரு பெண்ணை துடிக்க துடிக்க கொலை செய்திருக்கிறார். ஆனால் இதை பார்த்துக்கொண்டு வேடிக்கை பார்க்கும் பலர், அந்த நபரை தடுக்காமல் அப்படியே நிற்கின்றனர். என்ன நடந்தது? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

பெண்ணை கொலை செய்த நபர்!

புனேவில்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், 28 வயது பெண்ணை, அலுவலகத்தின் பார்கிங் ஏரியாவில் கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம், ஏதோ ஒரு சிசிடிவி காட்சியில் எல்லாம் இடம் பெறவில்லை. இதை ஒருவர் மாடி மீதிருந்து ஏறி நின்று ரெக்கார்ட் செய்திருக்கிறார். 

சுமார் 1.10 நிமிடங்கள் நிறைந்த அந்த வீடியோ, கொஞ்சம் ப்ளர் செய்யப்பட்டுள்ளது போல உள்ளது. கால் செண்டரில் வேலை பார்த்து வந்த பெண்ணின் பெயர் சுபதா ஷங்கர். இவருக்கு 28 வயது ஆகிறது. இவரை வெட்டிய அந்த நபருக்கு 30 வயது.

யாருமே உதவிக்கு வராத அவலம்..

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில் பயத்திற்குறிய விஷயமே அந்த நபர் அப்பெண்ணின் கழுத்தை வெட்டுவதோ, அல்லது அந்த பெண் துடிதுடிக்க இறந்து போவதோ அல்ல. அவரை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் மக்கள்தான். கத்தியை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணை, கொலை செய்த நபர் தெனாவட்டாக வட்டமிட, சுற்றி இருப்பவர்கள் அவர் அருகில் செல்லவே பயந்து பல மீட்டர்கள் தள்ளி நிற்கின்றனர்.

அந்த பெண் இறந்த பின்பு, அந்த நபர் சுற்றி இருப்பவர்களை பார்த்து ஏதோ பேசுகிறார். அதன் பிறகு ஒருவர் பின் ஒருவராக அவரை நெருங்கி, கொலையாளி தப்பி ஓடாமல் இருக்க அரணாக நிற்கின்றனர். 

எங்கே சென்றது மனிதம்? 

இந்த உலகில், இப்போதும் மழை பெய்ய காரணம், சில நல்லவர்கள் கொஞ்சம் மிஞ்சி இருப்பதால்தான் என்ற வாக்கியத்தை பிறர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால், இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது, குறிப்பாக பெண்களுக்கு எதிரான அநீதிகளை பிறர் வேடிக்கை பார்ப்பது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகையில், “எங்கே அந்த நல்லவர்கள்” என நமக்கு கேட்க தோன்றும். இந்தியா போன்ற பிற்போக்குவாதிகள் நிறைந்த நாடுகளில், ஒரு பெண்ணிற்கு அநீதி ஏற்படுகையில், “அவள் என்ன செய்திருப்பாளோ” என்பதுதான் பலரது தேவையற்ற கருத்தாக இருக்கிறது. இது, ஆசிட் அடிப்பதில் இருந்து, ஒரு பெண் கற்பழிக்கப்படுவது வரை, அவர்களுக்கு என்ன குற்றம் நடந்தாலும் அதற்கு அந்த பெண்ணே காரணம் என பட்டம் கட்டி விடுகின்றனர். அது போல்தான், இப்போது கொலை செய்யப்பட்ட பெண்ணை சுற்றி இருப்பவர்களும் யோசித்தார்களோ என கேள்வி எழுவதாக சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | மாரடைப்பால் உயரிழந்த 8 வயது சிறுமி!! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்..

மேலும் படிக்க | 4 நாளில் திருமணம்... மகளின் மார்பிலேயே சுட்ட தந்தை - அதிர்ச்சி பின்னணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News