நாடாளுமன்ற எம்.பி.யுடன் கரம் பிடிக்கிறாரா ரிங்கு சிங்? யார் அந்த பிரியா சரோஜ் எம்.பி.?

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் நாடாளுமன்ற எம்.பி. பிரியா சரோஜை கரம் பிடிக்கவிருக்கிறார் என்ற செய்திகள் பரவி வருகின்றன. 

ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடி பேட்டிங்கால் பிரபலமாகி தற்போது இந்திய டி20 அணியின் தவிர்க்கமுடியாத வீரராக வளம் வருபவர் ரிங்கு சிங். இந்த நிலையில், ரிங்கு சிங் நாடாளுமன்ற எம்.பி. பிரியா சரஜோஜை கரம் பிரிக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. யார் அந்த பிரியா சரோஜ். இளம் வயதில் எம்.பி. ஆனது எப்படி என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம். 

1 /8

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் உத்தரபிரதேச மாநில மச்லிஷஹர் தொகுதியில் களமிறக்கப்பட்டார் பிரியா சரோஜ். 

2 /8

26 வயதான பிரியா சரோஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் போலாநாத் பெற்ற வாக்குகளை விட 35,850 வாக்குகள் அதிகமாக பெற்று நாட்டின் இளம் எம்.பி.க்களில் ஒருவரானார்.   

3 /8

சட்டத்துறையை நோக்கமாக வைத்த் அமிட்டி பல்கலைக்கழகத்தில் எல் எல் பி படித்து பட்டம் பெற்ற பிரியா சரோஜ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். 

4 /8

உத்திரபிரதேசத்தின் கெரகட் தொகுதியின் அனுபவமிக்க அரசியவாதியும், மூன்று முறை எம்.பி. தற்போதைய எம்.எல்.ஏ.வுமாக இருக்கும் துஃபானி சரோஜின் மகள் பிரியா சரோஜ். அவரது குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு அவரையும் அரசியலில் நுழைய வழிவகுத்தது.   

5 /8

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குடன் எம்.பி. பிரியா சரோஜ் கரம் பிடிக்கிறார் என்ற செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும் பேச்சிவார்த்தையே சென்று கொண்டிருக்கிறது. இன்னும் நிச்சியதார்த்தம் ஏதும் நடைபெறவில்லை என அவரது தந்தை உறுதிபடுத்தியதாக கூறப்படுகிறது. 

6 /8

2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில், குஜராஜ் அணிக்கு எதிராக தனது கொல்கத்தா அணிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்படும்போது, 5 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றிபெறவைத்ததன் மூலம் மிகப் பிரபலமானார் ரிங்கு சிங்.   

7 /8

8 /8