இந்திய இரயில்வே எண்ணற்ற பயணிகளுக்கு விருப்பமான தேர்வாக உள்ளது, இது வசதி மற்றும் மலிவு விலையின் காரணமாக பலரால் விரும்பப்படுகிறது. இரவு நேர பயணங்களுக்கு ஏற்ற வசதியான இருக்கைகள் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற கட்டணங்களுடன், வயதானவர்களுக்கு ஏற்றதாக உள்ளது. அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு, இந்திய ரயில்வே மூன்று பிரத்யேக வாட்ஸ்அப் எண்கள் மூலம் பயணத்தை இன்னும் வசதியாக்கியுள்ளது. இந்த எண்கள் சிரமமின்றி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், சுவையான உணவுகளை ஆர்டர் செய்யவும் மற்றும் மருத்துவ உதவியை பெறவும் உதவுகின்றன. அடிக்கடி பயணிப்பவர்கள் பின்வரும் மூன்று எண்களைப் பயன்படுத்தி WhatsApp மூலம் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உணவு ஆர்டர் செய்தல்
ரயிலில் உணவு ஆர்டர் செய்ய 8750001323 என்ற எண்ணை பயன்படுத்தலாம். அனைத்து ரயில் நிலையங்களிலும் உணவு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் உங்களுக்கு வேண்டிய உணவை இந்த எண்ணைப் பயன்படுத்தி ஆர்டர் செய்யலாம். இந்த சேவையைப் பயன்படுத்த உங்கள் மொபைல் ஃபோனில் 8750001323 எண்ணைச் சேமித்து, உணவை ஆர்டர் செய்ய "ஹாய்" என்று அனுப்ப வேண்டும். பின்னர் நீங்கள் உணவைத் தேர்ந்தெடுத்து, ஆர்டர் செய்யும் வழிமுறைகளைப் பின்பற்றி வேண்டிய உணவைப் பெறலாம்.
மருத்துவச் சேவைகள்
ரயில் பயணத்தின் போது உங்களுக்கோ அல்லது வேறு யாருக்கோ உடல்நலக்குறைவு ஏற்பட்டால், மருத்துவ உதவியைப் பெற 138 என்ற WhatsApp எண்ணைப் பயன்படுத்தலாம். உங்களுக்கு உதவ ஒரு மருத்துவர் குழு அருகில் உள்ள நிலையத்திற்கு வரும். இந்த எண்ணைப் பயன்படுத்த, உங்கள் மொபைல் போனில் சேமித்து, "ஹாய்" என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். இந்த எண்களைச் சேமிப்பதன் மூலமும், எளிய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும், உங்கள் ரயில் பயணத்தை மிகவும் வசதியாகவும், தொந்தரவு இல்லாமலும் மாற்ற முடியும்.
டிக்கெட் முன்பதிவு
டிக்கெட் முன்பதிவுக்கான வாட்ஸ்அப் எண் 9881193322. இந்த எண்ணைப் பயன்படுத்தி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், PNR நிலையைப் பார்க்கவும் மற்றும் ரயில் எந்த நிலையத்தில் உள்ளது என்பதை அறியலாம். இந்த எண்ணைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. உங்கள் மொபைல் போனில் 9881193322 எண்ணைச் சேமித்து, வாட்ஸ்அப்பில் "ஹாய்" என்று மெசேஜ் அனுப்ப வேண்டும், பின்னர் விவரங்கள் உங்களுக்கு அனுப்பப்படும்.
மேலும் படிக்க | கடைசி தேதி ஜனவரி 23.. வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி எச்சரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ