பிரபல யூடியூபர் திடீர் மரணம்..இறப்பதற்கு முன் கடைசியாக போட்ட ரீல்ஸ்!!

Youtuber Rahul Tiky Death : ஈரோட்டை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர், சமீபத்தில சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - Bhuvaneshwari P S | Edited by - Yuvashree | Last Updated : Jan 18, 2025, 04:06 PM IST
  • பிரபல யூடியூபர் மரணம்
  • இறப்பதற்கு முன்னர் கடைசியாக போட்ட வீடியோ..
  • சாலை விபத்தில் உயிரிழந்தார்..
பிரபல யூடியூபர் திடீர் மரணம்..இறப்பதற்கு முன் கடைசியாக போட்ட ரீல்ஸ்!! title=

Youtuber Rahul Tikky Death : ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். டான்ஸ் மாஸ்டரான இவர், Rahul Tikki என்ற பெயரில் யூட்யூப் சேனலை நடத்தி வந்தார். இன்ஸ்டாவிலும் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர்.

யூடியூபர் ராகுலுக்கு, கவுந்தப்பாடியை சேர்ந்த தேவி ஸ்ரீ என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு ராகுல் தனது மாமியார் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கவுந்தப்பாடியில் உள்ள தனது மனைவியை அழைத்து வர அவர் அங்கு பயணித்துள்ளார்.

 அப்போது எதிர்பாராத விதமாக கவுந்தப்பாடி அருகே சாலையில் இருந்த தடுப்பின் மீது மோதி ராகுல் பைக் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராகுல் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அவரது உடல், மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடைசியாக போட்ட வீடியோ!

ராகுல், இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு, கடைசியாக இணையத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rahul tiky (@rahultiky)

எப்போதும் போல இதுவும் அவர் பதிவிட்ட ஒரு காமெடி ரீல்ஸ்தான் என்றாலும், இவர் இறந்துள்ளதால் இந்த கமெண்ட் செக்‌ஷனில் பலர் இவருக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | பிரபல நடிகர் மர்ம மரணம்! ஹோட்டல் அறையில் கிடந்த பிணம்-நடந்தது என்ன?

மேலும் படிக்க | ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த 2 தமிழ் சினிமா பிரபலங்கள்! ஒருவர் நடிகர், இன்னொருவர் இயக்குநர்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News