தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது - அண்ணாமலை பேட்டி!

மைனாரிட்டி இடமிருந்து வாக்கு வேண்டும் என்பதற்காக அதிமுக பாஜகவை விட்டு பிரிந்தது,  நாம் நாமாக இருந்தால் இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்கள் அனைவருமே ஆதரவு தருவார்கள் - அண்ணாமலை மதுரையில் பேட்டி.

Written by - RK Spark | Last Updated : Jan 19, 2025, 01:49 PM IST
  • தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது.
  • 36 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை கொடுக்க தயார்.
  • பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் பேட்டி.
தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது - அண்ணாமலை பேட்டி! title=

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று நடைபெறுகிற கட்சியினரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சாமியையும், அம்மனையும் தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, திருப்பதி போனால் ஒருநாள் முழுவதும் நிற்பார்கள், தற்போது என்ன பிரச்சனை என திருச்செந்தூரில் அறநிலையத்துறை அமைச்சர் திருச்செந்தூரில் பேசுகிறார். உள்ளத்தில் இருப்பது தற்போது வெளியில் வந்துள்ளது. கோவிலுக்கு செல்லக்கூடிய எண்ணிக்கை அதிகரித்துள்ளது, உண்டியல் வசூல் அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில் அடிப்படை வசதிகள் இல்லை. அதனால் தான் பாஜக சார்பாக இன்று மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் இருந்து பேசுகின்றோம். தமிழகத்தில் அறநிலையத்துறை இருக்கிறதா? சேகர் பாபு நடவடிக்கையை அதற்கு சாட்சி.

மேலும் படிக்க | பட்டப்பகலில் பெண்ணை வெட்டிக்கொன்ற நபர்! பலரும் வேடிக்கை பார்க்கும் காட்சி..வைரல் வீடியோ

ஒரு கருத்தை மட்டும் பிரதானப்படுத்தி அதை அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள், தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றி தெரியும் அவருடைய சாதனையை தெரியும். Al தொழில்நுட்பத்தில் சிறந்த பேராசிரியராக இருந்து வருகிறார், 2026 எத்தனை அமாவாசை இருக்கின்றது என்று கணக்கு செய்து கொள்ளுங்கள். எத்தனை பௌர்ணமி இருக்கிறது என்பதை எண்ணிக் கொள்ளுங்கள், அதற்குப் பிறகு இந்த ஆட்சி இருக்காது. முதல்வர் இந்த மீனாட்சி கோவில் வாசல் பகுதி நடந்து மக்களிடம் கேட்டால் தான் தற்போதைய நிலை தெரியும். மைனாரிட்டி இடமிருந்து வாக்கு வேண்டும் என்பதற்காக அதிமுக பாஜகவை விட்டு பிரிந்தது,  நாம் நாமாக இருந்தால் இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்கள் அனைவருமே ஆதரவு தருவார்கள்.

கொள்கை ரீதியாக அரசியலை நாங்கள் முன்னெடுத்து இருக்கின்றோம், அறநிலையத்துறை அகற்றுவோம் என்கின்ற நிலையை எத்தனை கட்சிகள் ஏற்றுக்கொள்ளும்? எங்களைப் பொறுத்தவரை ஒரு தனி பாதையில் தேசிய ஜனநாயக கூட்டணி பயணம் செய்ய ஆரம்பித்து இருக்கிறது, திமுகவினரை பற்றி ஒன்றுமே புரியவில்லை. செலெக்ட்டிவ் அமானுஷ்யா என்கின்ற ஒரு நோய் வந்துவிட்டதோ என்ற ஒரு சூழ்நிலை உள்ளது போல தெரிகிறது. தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது, 36 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை  மீண்டும் கொடுக்க தயாராக இருக்கிறோம். அமைச்சர் தங்கம் தென்னர எந்தத் திட்டத்திற்கும் அவர்கள் நிதி ஒதுக்கவில்லை என்று தெளிவாக சொல்லுங்கள். இவர்களுடைய அரசியலுக்காக மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும். வரும் மத்திய அரசு பட்ஜெட்டில் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவருடைய ஆட்சியின் அவலத்தை மறைப்பதற்காக மத்திய அரசு இது குறை சொல்லி வருகிறார்கள், ஐந்து வருடத்தில் ஒரு தொகுதியில் மக்கள் நான்கு முறை ஓட்டு போட்டார்கள் என்றால், ஒரே குடும்பத்தில் மாறி மாறி நிறுத்தினால் மக்களுடைய நிலைப்பாடு தான் என்ன? எங்களை பொறுத்தவரை 9 மாதத்திற்காக சட்டமன்ற உறுப்பினர் ஒரு வேண்டாத வேலை என்று இந்த தேர்தலை நாங்கள் பார்க்கின்றோம். பிரதமர் இங்கே வந்தவுடன் முதலமைச்சர் போட்டி போட்டு கை கொடுக்க கவனம் செலுத்துகிறார், ஆனால் போட்டியை எங்கு காட்ட வேண்டுமோ அங்கு காட்ட வேண்டும். முன்னாள் அமைச்சர் ஆளுநர் மீது ஆபாசமாக போஸ்டர் ஒட்டுவதும், வசை பாடுவது குறித்து முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார்? திமுக ஆட்சியின் மீது இருக்கக்கூடிய வெறுப்பை மறைப்பதற்கு ஆளுநரை பகடைக்காய் காட்டுகிறார்கள்.

யாராக இருந்தாலும் களத்தில் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் வீதியில் கால் பட வேண்டும்., பொறுப்புகளோ பதவிகளோ எப்போதும் இல்லை அடையாளப்படுத்தியது கிடையாது. நல்ல பணி செய்யக்கூடிய கவர்னர் ஏன் மாற்ற  வேண்டும், முதலமைச்சருக்கு கவர்னர் மீது இருக்கக்கூடிய பயத்தில் இது போன்று பிதற்றுகின்றார். தற்போது என்னுடன் வாருங்கள், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மதுபானக்கூடங்களை நான் காட்டுகின்றேன். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் டாஸ்மார்க் தான் நம்பர் ஒன், ஆனால் ரேஷன் கடைகளில் உங்களுக்கு கொடுப்பதற்கு பணம் இல்லை" என்று கூறினார்.

மேலும் படிக்க | கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News