இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட 3 வீரர்கள்! இனி வாய்ப்பு கிடைக்குமா?

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா கேப்டனாகவும், கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 /6

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இருந்து சில முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சமீபத்திய பார்ம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

2 /6

ருதுராஜ் கைகுவாட் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக ஆடி வந்தாலும், டி20 மற்றும் ஒருநாள் அணியில் அவருக்கு இடம் கிடைவில்லை. இனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்குமா என்பது சந்தேகமே.  

3 /6

தற்போது டி20 அணியின் கேப்டனாக இருந்தாலும் சூர்யாகுமார் யாதவிற்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த சில தொடர்களில் சரியாக விளையாடாததால் இடம் கிடைக்கவில்லை.  

4 /6

விஜய் ஹசாரே டிராபியில் தொடர்ந்து ரன்கள் அடித்து வந்தாலும் இந்திய அணியில் கருண் நாயருக்கு இடம் கிடைக்கவில்லை. மீண்டும் வாய்ப்பிற்காக காத்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

5 /6

பார்டர் கவாஸ்கர் தொடரில் இடம் பெற்று இருந்த சிராஜ் சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பெறவில்லை. இனி அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்.

6 /6

இந்தியாவின் டி20 அணியில் இடம் பெற்றுள்ள சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் பெறவில்லை. கடைசியாக விளையாடிய ஒருநாள் தொடர்களில் நல்ல ரன்கள் அடித்து இருந்தார்.