Bigg Boss Tamil Season 5 Latest Updates: பிக்பாஸ் இல் சூப்பர் சிங்கர் பிரியங்கா

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2021, 08:27 AM IST
Bigg Boss Tamil Season 5 Latest Updates: பிக்பாஸ் இல் சூப்பர் சிங்கர் பிரியங்கா title=

Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நிறைவடைந்து விட்டது. நான்காவது சீசனின் இறுதிப் போட்டி ஜனவரி மாதம் தான் நடத்தி முடிக்கப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் (Bigg Boss Tamil) 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) தொகுத்து வழங்கினார். நான்காவது சீசன் முடியும் போதே, ஐந்தாவது சீசன் ஜுன் - ஜுலை மாதத்தில் துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி திட்டமிட்டது போல்தொடங்கப்படவில்லை. 

ALSO READ | Bigg Boss Tamil Issue: பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்: பாஜக புகார்

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 பற்றிய முறையான அறிவிப்புக்கள் வர துவங்கின. சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் இரண்டு புரொமோகள் வெளியின. இந்த புரொமோகள் இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா (Priyanka Deshpande) பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார் என்று சமூக வலைதளங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. 

இந்த தகவல் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பிரியங்கா மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில்கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிளா இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Bigg Boss Tamil Season 5: இரண்டாவது புரொமோ வீடியோ வெளியானது; கசிந்தது முக்கிய தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News