ஏகே 62 படத்திற்கு முன்பே சூடு பிடிக்கும் அஜித்தின் ஏகே 63 படத்தின் பணிகள்!

'ஏகே 62' படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் 'ஏகே 63' படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Apr 17, 2023, 10:36 PM IST
  • சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் இதுவரை 4 படங்களில் நடித்திருக்கிறார்.
  • அஜித்தின் 'ஏகே 63' படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.
  • 'ஏகே 62' படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஏகே 62 படத்திற்கு முன்பே சூடு பிடிக்கும் அஜித்தின் ஏகே 63 படத்தின் பணிகள்! title=

'துணிவு' படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'ஏகே 62' படத்தில் நடிப்பதற்கு தயாராகிவிட்டார்.  ஆரம்பத்தில்  'ஏகே 62' படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது, அதற்கேற்ப இயக்குனரும் தனது சமூக வலைத்தளங்களில் 'ஏகே 62' என்று குறிப்பிட்டும் கவர் போட்டோவில் அஜித்தின் புகைப்படத்தையும் வைத்திருந்தார்.  ஆனால் விக்னேஷ் சிவனின் கதை அஜித்திற்கு திருப்திகரமானதாக இல்லாததால் இந்த திட்டத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.  லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியதால் படத்தின் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.  

மேலும் படிக்க | சூது கவ்வும் 2 படத்தில் விஜய் சேதுபதி இல்லை! யார் ஹீரோ தெரியுமா?

மே 1-ம் தேதியன்று அஜித்தின் 52-வது பிறந்தநாளையொட்டி 'ஏகே 62' படத்தின் பட தலைப்புடன் கூடிய அதிகாரபூர்வ மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  'ஏகே 62' படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் 'ஏகே 63' படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.  கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடிகர் அஜித் 'ஏகே 63' படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.  இதுவரை அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா தான் 'ஏகே 63' படத்தை இயக்குகிறார்.  

மேலும் 'ஏகே 63' படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் நடிகர் அஜித் இணைவது இதுதான் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைவது இயக்குனர் சிறுத்தை சிவாவிற்கு முதல் தடவையல்ல, இதற்கு முன்னர் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவா 'அண்ணாத்தே' படத்தை இயக்கினார்.  நடிகர் அஜித் பைக்கில் தனது சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு 'ஏகே 63' படம் 2024-ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2025ம் ஆண்டின் தொடக்கத்திலோ வெளியாகும் என்று கூறப்படுகிறது.  சிறுத்தை சிவா தற்போது சூர்யாவை வைத்து கங்குவா என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் கதையில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்! முழு விவரம்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News