பிக்பாஸ் டைட்டில் யாருக்கு?; ரகசியத்தை போட்டு உடைத்த ஆர்த்தி...!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் டைட்டிலை யார் வெல்லப்போகிறார்கள் என நகைசுவை நடிகை தனது ட்விட்டர் பாகத்தில் தெரிவித்துள்ளார்...! 

Last Updated : Aug 27, 2018, 12:25 PM IST
பிக்பாஸ் டைட்டில் யாருக்கு?; ரகசியத்தை போட்டு உடைத்த ஆர்த்தி...!  title=

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் டைட்டிலை யார் வெல்லப்போகிறார்கள் என நகைசுவை நடிகை தனது ட்விட்டர் பாகத்தில் தெரிவித்துள்ளார்...! 

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி சுமார் கடந்த 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் 9 பேர் மட்டுமே தற்போது பிக்பாஸ் வீட்டிற்க்குள் எஞ்சியுள்ளனர். இந்த வாரத்தில் நடைபெற்ற டாஸ்க்குகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று மஹத் வீட்டை விட்டு வெளியேறினார். மீதமிருக்கும் நபர்களில் டேனியல், மும்தாஜ், சென்ராயன், ரித்விகா, ஜனனி, யாஷிகா ஆகியோர் வலிமை நிறைந்த போட்டியாளர்களாகவே பார்வையாளர்கள் கருதுகின்றனர். 

இதனால் இறுதியில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற தனது கணிப்பை நகைச்சுவை நடிகை ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மும்தாஜ், சென்ராயன் இருவரில் ஒருவர் பிக்பாஸ் டைட்டிலை வென்றிட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர் ரித்விகா தான் பிக்பாஸ் டைட்டிலை வெல்வார், அதற்கான தகுதிகள் அனைத்தும் அவரிடம் இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த நடிகை ஆர்த்தி, ''ரித்விகா எனது நல்ல தோழி. ஆரம்ப நாட்களில் அவர் பாதுகாப்பாக விளையாடினார். மற்றவர்களைப் பற்றி கணிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டார். 

ஆனால், முதல் நாளில் இருந்து மும்தாஜ் முழு ஆற்றலுடன், மிகவும் வலிமையான போட்டியாளராக உள்ளார். அவர் எப்போதும் பாதுகாப்பாக இதுவரை விளையாடியதில்லை. மேலும், அவர் யாரையும் சார்ந்து இருக்கவுமில்லை,'' என்று கூறியுள்ளார்.

 

Trending News