Baking soda: பேக்கிங் சோடாவை குறைந்த அளவில் எடுத்து கொண்டால் அது பாதுகாப்பானது. ஆனால் அதனை அதிகப்படியான எடுத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை. பேக்கிங் சோடா கேக், ரொட்டி மற்றும் சில உணவு பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இதனை எப்போதாவது சாப்பிடுவதால் எந்தத் தீங்கும் ஏற்பட போவது இல்லை. ஆனால் தினசரி அல்லது அடிக்கடி சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தினசரி உணவில் பேக்கிங் சோடா எடுத்து கொண்டால் செரிமான அமைப்பில் தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமின்றி பல நோய்களையும் ஏற்படுத்த கூடும்.
மேலும் படிக்க | சர்க்கரை நோய் பாடாய் படுத்துகிறதா? இந்தப் பச்சைப் பழம், இலை சாப்பிட்டால் போதும்
பேக்கிங் சோடாவின் பயன்கள்
பேக்கிங் சோடா சில நல்ல காரணத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து ஊறவைத்து அதில் ஆப்பிளை கழுவினால் பழத்தில் உள்ள பூச்சிக்கொல்லிகளை நீக்க உதவும். ஏனெனில் பேக்கிங் சோடா பூச்சிக்கொல்லிகளை அழிக்க உதவுகிறது. மேலும் பேக்கிங் சோடாவை கிளீனராகப் பயன்படுத்தலாம்.
குளிர்சாதன பெட்டியில் உள்ள அழுக்குகளை துடைக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். மேலும் டப்கள், சின்க்குகள் போன்றவற்றை சுத்தம் செய்ய உதவும். கறைபடிந்த பாத்திரங்களை கழுவவும் பேக்கிங் சோடா உதவுகிறது. துணிகளை துவைக்க, நெஞ்செரிச்சல் குறைய, பூச்சி கடித்தால் ஏற்படும் எரிச்சல் அரிப்பு குறைய, கர்ப்ப காலத்தில் பற்களை பராமரிக்கவும் பேக்கிங் சோடா உதவுகிறது.
பேக்கிங் சோடாவின் தீமைகள்
உடல் எடை: பேக்கிங் சோடா உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்றும், உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவும் என்பதற்கு எந்த ஒரு ஆய்வும் இல்லை. உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகளை தவிர சிறந்த வழி இல்லை.
வயிற்றில் பாதிப்பு: பேக்கிங் சோடா பொதுவாக பேக்கிங் செய்யப்படும் உணவுப்பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் வீக்கம் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது செரிமான அமைப்பையும் பாதிக்கிறது.
சோடியம்: பேக்கிங் சோடாவில் சோடியம் பைகார்பனேட் என்ற கலவை உள்ளது. இதனை அதிகம் சாப்பிட்டால் உடலில் சோடியம் அளவை அதிகரிக்கும். இது இரத்த அழுத்தத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது மற்றும் இதயம் சம்பத்தப்பட்ட நோயை ஏற்படுத்தும்.
பொட்டாசியம் குறைபாடு: அதிகப்படியான சோடியம் உடலில் பொட்டாசியம் குறைபாட்டை ஏற்படுத்தும், இது உடல் பலவீனம், சோர்வு மற்றும் தசைப்பிடிப்புகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. மேலும் இது சிறுநீரகத்தை சேதப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. பேக்கிங் சோடாவை அதிகமாக உட்கொள்வதும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். இதனால் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நீங்கள் அதிக சர்க்கரை சாப்பிடுகிறீர்களா? இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ