நவராத்திரி பண்டிகை ஏழாம் நாள் சிறப்பு வழிப்பாடு: நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி (Navaratri 2023) பண்டிகை, அக்டோபர் 15 ஆம் தேதி அதாவது கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி அன்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. வரும் அக்டோபர் 23 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 24 ஆம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
நவராத்திரி பண்டிகை ஏழாம் நாள் 2023:
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். ஒன்பது நாளும் ஒன்பது வகையான வாத்தியங்கள் வாசிப்பார்கள்.
மேலும் படிக்க | சனிக்கிழமையில் ‘இதை’ மட்டும் செய்யவே கூடாது..! மீறினால் துரதிர்ஷ்டம் கன்ஃபார்ம்..!
நவராத்திரியின் ஒன்பது நாட்கள்:
நவராத்திரியின் (Navaratri) ஒன்பது நாட்களும் சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது. நவதுர்காவின் ஒவ்வொரு அவதாரமும் துர்கா தேவியின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ணமையமான, வித்தியாசமான கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9 நாட்களும் விமரிசையாக கொண்டாடப்படும். பெண்கள் 9 நாட்களும் தங்களை அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர்.
நவராத்திரி பூஜை:
நவராத்திரியின் ஏழாவது நாள் (Navratri Day Seven) அதாவது அக்டோபர் 21 ஆம் தேதி காலை 9:15 மணி முதல் 10.15 மணி வரையிலான நேரத்திற்குள் அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து பூஜையை செய்து முடித்துவிட வேண்டும். அதேபோல் மாலை 4:45 மணி முதல் 5.45 மணிக்குள் மேல் நவராத்திரி பூஜை செய்யலாம். முக்கியமாக ராகு காலம், எமகண்டம் நேரத்தில் பூஜை (Navaratri Pooja) செய்ய வேண்டாம்.
கலைமகளின் அம்சமாய் இந்த நவராத்திரி ஏழாம் நாளில் அருளும் தேவியை மனம் குளிர வழிபட்டு வேண்டினால் எதிரிகளின் தொல்லைகள் நீங்கி நலம் சேரும் என்பது நம்பிக்கை.
நவராத்திரி பூஜை ஏழாவது நாள்:
அம்பாள்: காளராத்ரி தேவியை அலங்கரித்து வழிபட வேண்டும்.
கோலம்: மலர்களால் சங்கு வடிவில் கோலம் போட்டு வழிபட வேண்டும்.
மலர்கள்: தாழம்பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம்: எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்
பாட வேண்டிய ராகம் பிலஹரி.
பழங்கள்: பேரீச்சம் பழம் படைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.
ஆபரணம்: வெள்ளி, தங்கம் போன்றவைகளால் ஆன மாலைகள்.
வஸ்திரம்: கருஞ்சிவப்பு, வெண்மை பட்டாடை
இலை: விபூதி பச்சிலை, துளசி, வில்வம்.
பலன்கள்:
நவராத்திரியின் ஏழாம் நாளில் அம்பிகையை வழிபடுவதால் குடும்பத்தில் அமைதி ஏற்படும். தீய குணங்கள் நீங்கும், துர்சக்திகள் நெருங்காது, மனம் வலிமை அடையும், தைரியம் உண்டாகும், அறியாமை நம்மை விட்டு நீங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ