முதல் முறையாக ஏசி வாங்க போறிங்களா? இத கண்டிப்பா மறக்காதிங்க!

அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற பிரபலமான இ-காமர்ஸ் தளங்கள் பெரிய வீட்டு உபயோகப் பொருட்களுக்கு தள்ளுபடியை வழங்குவதால், இந்த சலுகையை பயன்படுத்தி நீங்கள் கோடையை குளுமையாக்க புதிய ஏசி-யை வாங்கி குளுமையை அனுபவிக்கலாம்.

Written by - RK Spark | Last Updated : May 13, 2023, 11:05 AM IST
  • ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக ஏசி-களை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.
  • அறை அமைப்பைப் பொறுத்து, ஸ்பிளிட் அல்லது விண்டோ ஏசிகளில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
  • இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் பொதுவாக ஸ்பிளிட் ஏசிகளுடன் தொடர்புடை
  • யது.
முதல் முறையாக ஏசி வாங்க போறிங்களா? இத கண்டிப்பா மறக்காதிங்க! title=

ஆன்லைன் மூலமாக ஏர் கண்டிஷனரை வாங்குவது அல்லது வாடகைக்கு எடுப்பது மிகவும் எளிதான ஒன்று. கொளுத்தும் வெயிலை எதிர்த்துப் போராட பலரும் ஏர் கண்டிஷனர் வாங்க விரும்புகின்றனர், நாம் வாங்கக்கூடிய ஏர் கண்டிஷ்னர் நமது மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்கும் வகையில் இருக்க வேண்டும். அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற பிரபலமான இ-காமர்ஸ் தளங்கள் பெரிய வீட்டு உபயோகப் பொருட்களுக்கு தள்ளுபடியை வழங்குவதால், இந்த சலுகையை பயன்படுத்தி நீங்கள் கோடையை குளுமையாக்க புதிய ஏசி-யை வாங்கி குளுமையை அனுபவிக்கலாம். பலரும் இதுபோன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்குவதே நம்பகத்தன்மையுடன் இருக்கும் என்று நினைக்கின்றனர், ஆனால் இப்போது ஆன்லைனிலும் நம்பகத்தன்மையுடன் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கிடைக்கிறது. உங்களிடம் போதுமான பட்ஜெட் இல்லையென்றால் நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக ஏசி-களை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.

லும் படிக்க | கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரயில் டிக்கெட்டில் சலுகை... முழு விவரம் இதோ!

உங்கள் அறை அமைப்பைப் பொறுத்து, ஸ்பிளிட் அல்லது விண்டோ ஏசிகளில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். விண்டோ ஏசிகள் பொதுவாக பெரியளவில் இருக்கும், ஏனெனில் அவை ஒரே பெட்டியில் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியது. இந்த வகை ஏசி-கள் உங்களுக்கு மலிவான விலையிலும் நல்ல நிலையிலும் கிடைக்கிறது. உங்கள் அறையில் பெரிய ஜன்னல்கள் இல்லை என்றால், நீங்கள் தாராளமாக ஸ்பிளிட் ஏசி-யை தேர்வு செய்துகொள்ளலாம். ஸ்பிளிட் ஏசிகள் அழகாக இருப்பதால் அதன் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு பெரும்பாலான நபர்கள் இந்த ஏசி-களை தேர்வு செய்து கொள்வார்கள். ஸ்பிளிட் ஏசிகள், உட்புற அலகு மற்றும் வெளிப்புற கம்ப்ரசர் ஆகிய இரண்டு கூறுகளை உள்ளடக்கியது. இதில் கம்ப்ரசர் உட்புற அலகுக்கு அருகில் அமைந்துள்ளது. டன் வகை ஏசிகள் வாங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறது. 1 டன் கூலிங் என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு ஏசி யூனிட் வெப்பத்தின் அளவைக் குறிக்கிறது. 1 டன் கூலிங் ஆனது 24 மணிநேரத்தில் ஒரு டன் பனியை உருகுவதற்கு பிரித்தெடுக்கப்பட வேண்டிய வெப்பத்தின் அளவிற்கு சமம்.  

-1டன் ஏசி: 120 சதுர அடி வரையிலான அறைகளுக்கு ஏற்றது.

-1.5டன் ஏசி: 180 சதுர அடி வரையிலான அறைகளுக்கு ஏற்றது.

-2டன் ஏசி: 250 சதுர அடி வரை அறைகளுக்கு ஏற்றது.

ஏசி மற்றும் பிற பெரியளவிலான வீட்டு உபயோகப் பொருட்களில் நட்சத்திர குறியீடுகள் இருப்பதை பார்த்திருக்கிறோம். இந்த நட்சத்திரங்கள் சிறந்த ஆற்றல் திறனை குறிக்கிறது. கூடுதலாக, இந்த நட்சத்திர லேபிள்கள் மின் அமைச்சகத்தின் கீழ் உள்ள எரிசக்தி திறன் பணியகத்தால் (BEE) வழங்கப்படுகின்றன. அதிக நட்சத்திரங்களைக் கொண்ட சாதனங்கள் விலை உயர்ந்தவை, ஏனெனில் அவை சிறந்த ஆற்றல் சேமிப்பு மற்றும் குளிரூட்டும் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் ஏசி பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கணக்கிடுவது நல்லது. ஒவ்வொரு வருடமும் நான்கைந்து மாதங்களுக்கு ஏழு மணிநேரத்திற்கு மேல் ஏசியை உபயோகிக்க வேண்டும் என்றால், ஐந்து நட்சத்திர தரம் பெற்ற ஏசியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அரசாங்கம் அடிக்கடி விதிகளை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறது, 2018-ல் ஐந்து நட்சத்திர மதிப்பீடு, 2022-ல் மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுக்கு சமம் என்று கூறப்பட்டது. உங்கள் ஏசி தினமும் மூன்று அல்லது நான்கு மணிநேரம் மட்டுமே இயங்கினால், நான்கு அல்லது மூன்று நட்சத்திர மதிப்பு கொண்ட ஏசி பயனுள்ளதாக இருக்கும்.

இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் பொதுவாக ஸ்பிளிட் ஏசிகளுடன் தொடர்புடையது, இது வேகமான மற்றும் அதிக சக்தி-திறனுள்ள குளிரூட்டலுக்கான கம்ப்ரஸர் தொழில்நுட்பமாகும். கம்ப்ரஸர் வேகத்தை நிர்வகிக்க இன்வெர்ட்டர் ஏசிகள் மாறி அதிர்வெண் டிரைவை (விஎஃப்டி) பயன்படுத்துகின்றன. உதாரணமாக, நீங்கள் 2 டன் ஸ்பிளிட் ஏசியை வாங்கினால், கம்ப்ரசர் வெப்பநிலையின் அடிப்படையில் 0.5 டன் மற்றும் 1.5 டன் குளிரூட்டும் திறன் வரை செயல்படும். இன்வெர்ட்டர் அல்லாத ஏசிகள் ஒரு நிலையான-வேக கம்ப்ரஸரைப் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் இன்வெர்ட்டர் ஏசிகள் பெரிய குடியிருப்புகளுக்கு ஏற்றதாக இருக்கும். ஏசி-க்கான உத்தரவாதத்தை சரிபார்க்க வேண்டியது அவசியம், நீங்கள் வாங்கும் பிராண்டின் அருகிலுள்ள கடை அல்லது சேவை மையத்தைப் பார்ப்பது சிறந்தது.

மேலும் படிக்க | ரயிலில் குழந்தைகள் பயணம் செய்ய புதிய விதிகள் - இந்திய ரயில்வே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News