காஷ்மீரை மீட்க உயிரையும் கோடுப்பேன் -அமித் ஷா ஆவேசம்!

காஷ்மீரை மீட்க எனது உயிரையும் கொடுக்க தயாராக இருப்பதாக மக்களவையில், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Last Updated : Aug 6, 2019, 12:39 PM IST
காஷ்மீரை மீட்க உயிரையும் கோடுப்பேன் -அமித் ஷா ஆவேசம்! title=

காஷ்மீரை மீட்க எனது உயிரையும் கொடுக்க தயாராக இருப்பதாக மக்களவையில், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடைப்பெற்றது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் MP-க்கள், கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனிடையே இன்றையே விவாதத்தில் அமித்ஷா பேசுகையில்; காஷ்மீர் இந்தியாவின் உள்ளடக்கிய பகுதி ஆகும். மாநிலத்தின் வளர்ச்சிக்காக பிரிக்கப்பட்டுள்ளது. 370 ரத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்கின்றனர். 370 ஐ மாற்றி அமைக்கலாம் என ஏற்கனவே சட்ட சரத்தில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே தேசிய கீதம் ஒலிக்க வேண்டும். நாடு முழுவதும் பொருந்தும் சட்டம் காஷ்மீருக்கும் இனி பொருந்தும். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்கவும், காஷ்மீரில் இணைக்கவும் எனது உயிரையும் கொடுக்க தயாராக உள்ளேன். ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க காங்கிரஸ் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐ.நா., நமது விவகாரத்தில் தலையிட வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறதா? காஷ்மீர் தொடர்பாக சட்டம் இயற்றும் உரிமை பாராளுமன்றத்துக்கு உண்டு" என தெரிவித்தார்.

அமித் ஷாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆதீர் ரஞ்சன் சவுத்திரி பேசுகையில்: காஷ்மீர் இந்தியாவின் உள்ளடக்கிய பகுதியா? இதில் விதி மீறல் நடந்துள்து. மாநில பிரிப்பு சரியில்லை என தெரிவித்தார். 

திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசுகையில்; காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். அங்கு அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எங்களின் நண்பர்களான உமர் அப்துல்லா, மெகபூபா எந்த நிலையில் இருக்கின்றனர் என்று யாருக்கும் தெரியவில்லை என வாதிட்டார்.

Trending News