மின்னல் தாக்கியவர்களை குணப்படுத்த கிராம மக்கள் மாட்டு சானத்தில் புதைத்து வைத்ததால் இருவர் உயிரிழப்பு..!
சத்தீஸ்கரில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் ஜாஷ்பூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதால், பாதிக்கபட்டவர்களை குணப்படுத்தும் முயற்சியில் ஒரு பெண் உட்பட மூன்று பேரை சில கிராமவாசிகள் மாட்டு சாணத்தில் புதைக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதையடுத்து, அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர், அவர்களில் இருவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை மாநில தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாவட்டத்தின் பாக்பஹார் கிராமத்தில் நெல் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த போது, ஜாஷ்பூர் துணை பிரதேச போலீஸ் அதிகாரி ராஜேந்திர பரிஹார் PTI-யிடம் தெரிவித்துள்ளார்.
பழத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்த போது, அவர்கள் ஒரு வயலில் ஒரு மரத்தின் கீழ் தஞ்சம் புகுந்தனர். அப்போது, அங்கு திடீரென மின்னல் தாக்கியது, இதையடுத்து மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, என்றார். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில கிராமவாசிகள் அவர்களிடையே ஒரு மூடநம்பிக்கை நடைமுறையின் ஒரு பகுதியாக மாட்டு சாணத்தில் கீழே இருந்து கழுத்து வரை புதைத்தனர்.
READ | E-பாஸ் இல்லாமல் கர்நாடகாவிலிருந்து நடந்து வருவோருக்கு அனுமதி இல்லை: பீலா ராஜேஷ்
"தீக்காயங்களை குணப்படுத்தும் சக்தி மாட்டு சாணத்திற்கு இருப்பதாக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் நம்புகின்றனர்," என்று அவர் கூறினார்.
பின்னர், வேறு சில கிராமவாசிகள் தலையிட்டபோது, பாதிக்கப்பட்ட மூன்று பேரும் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர், அவர்களில் இருவர் - சுனில் சாய் (22) மற்றும் சம்பா ரவுத் (20) ஆகியோர் இறந்ததாக அறிவிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
காயமடைந்த மற்ற நபர், 23 வயது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், என்றார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, இறந்தவரின் உறவினர்களுக்கு விதிகளின்படி இழப்பீடு வழங்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.