ஜம்மு மற்றும் காஷ்மீர் - பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 போலீசார் உயிரிழப்பு மூன்றுபேர் காயம்!!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் நீதிமன்ற வளாகத்தில் இரவு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இன்று அதிகாலை அந்த பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள் நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசாரை குறிவைத்து துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர்.
இதற்கு பதிலடியாக போலீசாரும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 2 போலீசார் உயிரிழந்தனர். மேலும், மூன்று போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் ஜங்லாட்மண்டி பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப். படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
#SpotVisuals Terrorists opened fired on a police guard post, deployed at District court complex in #Pulwama earlier today. Two police personnel lost their lives while three sustained injuries in the exchange of fire #JammuAndKashmir pic.twitter.com/nmhQf6Wop7
— ANI (@ANI) June 12, 2018