இன்று டெல்லியில் GST கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் பல அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி-யில் மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பதை பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
இதுக்குறித்து பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஜிஎஸ்டி தொகுப்பு சலுகைக்கான வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.1.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலன் அடையும். இது வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு கொண்டுவரப்படும். மேலும் தொழில் நிறுவனங்களுக்கான ஆண்டு வரிவிலக்கின் உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் நாள் டெல்லியில் நடைப்பெற்ற GST கவுன்சில் கூட்டத்தில், GST வரி வீதத்தில் பல்வேறு சீரமைப்பு செய்யப்பட்டு வரிக் குறைப்பு செய்து அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பபின் படி சினிமா டிக்கெட் கட்டணம், LED டிவி, கம்ப்யூட்டர் மானிட்டர், பவர் பேங்க் உள்ளிட்ட 23 பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான வரி குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.