'INDIA கூட்டணி இருக்கே...' ராஜினாமாவுக்கு பின் நிதிஷ் குமார் போட்ட திடீர் குண்டு - அடுத்தது என்ன?

National Politics News: பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 28, 2024, 12:02 PM IST
  • மீண்டும் இன்று முதல்வராக பொறுப்பேற்பார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
  • மகாகூட்டணியின் ஆட்சி இன்று கலைந்தது.
  • பாஜக தலைமையில் என்டிஏ கூட்டணியில் மீண்டும் ஆட்சி அமைய வாய்ப்பு.
'INDIA கூட்டணி இருக்கே...' ராஜினாமாவுக்கு பின் நிதிஷ் குமார் போட்ட திடீர் குண்டு - அடுத்தது என்ன? title=

National Politics News In Tamil: ராஷ்டிரியா ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடனான மகா கூட்டணியில் இருந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வெளியேற உள்ளார் என கடந்த சில நாள்களாக ஊகங்கள் வெளியானது. அந்த வகையில், அந்த ஊகங்களை உண்மையாக்கி அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார், நிதிஷ் குமார். 

ராஜினாமா ஏன்?

பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்ததை ஐக்கிய ஜனதா கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் அளித்தார். அவரது ராஜினாமாவுடன், மகாகூட்டணி அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கலைந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. 

நிதிஷ் குமார் ராஜினாமா செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"நான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இந்த அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். நான் எல்லாரிடம் இருந்தும் ஆலோசனைகளைப் பெற்றேன். புதிய கூட்டணிக்காக முந்தைய கூட்டணியில் இருந்து விலகி உள்ளேன். ஆனால் நிலைமை இன்னும் சரியாகவில்லை. அதனால் ராஜினாமா செய்துள்ளேன்" என்றார்.

மேலும் படிக்க | INDIA Alliance.. நிதிஷ் குமார்... மம்தா... கேஜ்ரிவால்... அதிகரிக்கும் சவால்கள்!

இந்தியா கூட்டணி

மேலும் அடுத்தது என்ன என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,"இனி கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசித்து ஒரு முடிவை எட்டுவோம்" என்றார். மேலும் INDIA கூட்டணியை சாடியும் அவர் கருத்து தெரிவித்தார். "நான் ஒரு கூட்டணியை (INDIA) உருவாக்கினேன், ஆனால் யாரும் எந்த முன்னெடுப்பையும் அதற்காக செய்யவில்லை" என நிதிஷ் குமார் குற்றஞ்சாட்டினார்.

அடுத்தது என்ன?

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஏற்கனவே பாஜக மற்றும் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகியவற்றிடம் இருந்து ஆதரவு கடிதம் பெற்றுள்ளது. நிதிஷ் குமார் இன்று மாலை 5 மீண்டும் மாநில முதல்வராக பதவியேற்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், துணை முதலமைச்சராக சிராக் பஸ்வான் பதவியேற்பார் எனவும் கூறப்படுகிறது.

பீகாரில் மொத்தம் 243 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக ராஷ்டிரிய ஜனதா தளத்தில் 79 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து பாஜகவிடம் 78 உறுப்பினர்கள் உள்ளனர். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 45 உறுப்பினர்களையும், காங்கிரஸ் 19 உறுப்பினர்களையும் வைத்துள்ளது, 

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 உறுப்பினர்கள், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) 4 உறுப்பினர்களை வைத்துள்ளது. மேலும் இரண்டு இடங்கள் AIMIM உடன் உள்ளன, மற்றொரு உறுப்பினர் சுயேச்சை ஆவார்.

மேலும் படிக்க | நீட் தேர்வுன்னாலே பிரச்சனையா? முதுகலை பல் மருத்துவ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு கோரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News