பிஹார் மாநிலத்தில் வெறும் 17 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக!

நெடுநாட்களாக இழுபறியில் இருந்த பிஹார் மாநில பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது!

Last Updated : Dec 23, 2018, 04:26 PM IST
பிஹார் மாநிலத்தில் வெறும் 17 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக! title=

நெடுநாட்களாக இழுபறியில் இருந்த பிஹார் மாநில பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது!

பிஹாரில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில், கடந்த 2014 தேர்தலின் போது தேசிய ஜன நாயகக் கூட்டணியில் பாஜக 29, ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி 7 மற்றும் குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 4 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில், பாஜக-விற்கு 22, பாஸ்வானுக்கு 6, குஷ்வாஹாவுக்கு 3 தொகுதிகள் கிடைத்தன.

இந்நிலையில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் இணைந்துள்ளதால் அவரது ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடம் ஒதுக்க வேண்டியுள்ளது. தொகுதி பங்கீட்டில் கோராப்படும் அளவிலான தொகுதிகள் கிடைக்காத நிலையில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. 

இந்த நிலையில் இன்று பிஹாரில் பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதினை குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாஜக தலைவர் அமித் ஷா-வை டெல்லியில் சந்தித்து, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தனர். 

இதன்படி மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக-வும், ஐக்கிய ஜனதாதளமும் தலா 17 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 6 தொகுதிகளில் ராம் விலாஸ் பாஸ்வானில் லோக் ஜனசக்தி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் போட்டியிடவில்லை. மாறாக அடுத்து வரும் மாநிலங்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அவர் போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News