மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் 2019: பிரதமர் மோடியின் இன்றைய உரை..

அரசியலில் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதே எதிர்கட்சிகளின் ஒரே ஒரு அடிப்படை ஆகும் என கடுமையாக தாக்கி பேசியா பிரதமர் மோடி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 17, 2019, 07:47 PM IST
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் 2019: பிரதமர் மோடியின் இன்றைய உரை..  title=

மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலை (Maharashtra Assembly Elections) அடுத்து மாநிலம், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வேட்புமனு தாக்கல் (Nomination) செய்த பிறகு, இப்போது அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தவும், அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவும் அரசியல் கட்சிகள் தங்கள் முழு பலத்தையும் அளித்து வருகின்றன. மகாராஷ்டிராவின் அரசியல் (Maharashtra Politics) பாஜகவை பலப்படுத்த இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடி சதாராவில் (Satara) நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். கூட்டணியில் சிவசேனாவை (Shiv Sena) விட பாஜக (BJP) அதிக இடங்களில் போட்டியிடுவதால் பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த முறை தாக்கரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தேர்தல் களத்தில் உள்ளார் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் சட்டபை தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதியும், தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24 ஆம் தேதியும் வெளியாக உள்ளது.

சதாராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "பாஜகவுக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு மற்றும் உற்சாகத்தால் எதிரணியினர் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்திலும், அச்சத்திலும் உள்ளனர். சதாராவின் நிலம் புனிதர்களின் நிலம். இந்த நிலத்திலிருந்து ஒப்பிட முடியாத அளவுக்கு சமூக மற்றும் ஆன்மீக தலைமை வெளியே வந்துள்ளது. சதாரா எனக்கு ஒரு வகையில் குரு பூமி எனக் குறிப்பிட்டார். 

இன்றுவரை பாஜகவுக்கு சிவாஜி மகாராஜின் ஆசீர்வாதம் இருந்தன, இன்று அவருடைய முழு குடும்பமும் எங்களுடன் இருக்கிறது. இந்தியா மீது தப்பான பார்வை வைத்திருப்பவர்களுக்கு தகுந்த பதில் வழங்கப்படும். சத்ரபதி சிவாஜி படையால் கடற்படைய உருவாக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் விதமான கடற்படை, வான்படை மற்றும் இராணுவம் என அனைத்து நமது அரசாங்கம் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். அதற்கு காரணம் தேசத்தின் பாதுகாப்பிற்காக மத்திய அரசாங்கம் எடுத்த முடிவுகள் தான். இதுபோல யாரும் தைரியம் இதற்கு முன் காட்டப்படவில்லை. ஆனால் இன்று மகாராஷ்டிராவில் எங்களுக்கு எதிராக நிற்பவர்கள் தேசிய பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவையும் எதிர்ப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறினார்.

எதிர்க்கட்சிகளை தாக்கிய பேசிய பிரதமர் மோடி மேலும் கூறுகையில், "காங்கிரஸ் உட்பட எதிர் அணியினர் ரஃபேல் போன்ற நவீன போர் விமானத்தை தவறாக சித்தரிக்கும் போது, ​​இந்த தேசபக்தி நிலம் பாதிக்கப்படுவதாக நான் நம்புகிறேன். காங்கிரஸ் மற்றும் என்சிபி தலைவர்கள், நமது துணிச்சலான இராணுவ வீரர்கள் குறித்து கேள்விகளை எழுப்பும்போது, ​​370 வது சிறப்பு பிரிவு பற்றி அவர்கள் வதந்திகளைப் பரப்பும்போது, ​​முழு சதாராவும் ஏமாற்றமடைகிறது. மேலும் வீர் சாவர்க்கரை இழிவுபடுத்த முயற்சிக்கும்போது சதாரா மக்களின் கோபம் விண்ணை தொடுகிறது எனக் கூறினார். 

காங்கிரஸ் மற்றும் என்.சி.பி கட்சிகளுக்குள் ஒன்றுமை இல்லை. இரு கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் அந்தஸ்தைக் காட்ட போட்டி போடுகிறார்கள். அவர்களுக்குள் ஒருவரையொருவர் குறைக் கூறிக்கொள்கிறார்கள். இப்படி இருக்கும் ஒரு கூட்டணி எப்படி மகாராஷ்டிராவை ஒன்றுமையாக வைக்க முடியும். அவர்களுக்கு அரசியலில் கொள்ளை அடிக்க வேண்டும் என ஒரே ஒரு அடிப்படை மட்டுமே உள்ளது என கடுமையாக தாக்கி பேசினார் பிரதமர் மோடி.

Trending News