எளிதாக வாழத்தகுதியான முதல் 10 நரங்களில் புனே முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால் சென்னை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்கள் எங்கே?
இந்தியாவில் பொதுமக்களுக்கு கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் தேவைப்பாடுகள் எளிதாக கிடைக்ககூடிய நகரப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் புனே முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் பெரிய முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை போன்றவை டாப் 10 லிஸ்டில் இல்லை.
புனேவை அடுத்து நவி மும்பை மற்றும் கிரேட்டர் மும்பை, திருப்பதி மற்றும் சண்டிகர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. டெல்லி 65 வது இடத்திலும், சென்னை 14 வது இடத்திலும் உள்ளது. ஆனால் இந்த லிஸ்டில் கொல்கத்தா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு நகரங்களும், ஆந்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் இரண்டு நகரங்களும், அரியான மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஒரு நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
முதல் 10 இடத்தை பிடித்த நகரங்கள்:
1. புனே
2. நவி மும்பை
3. கிரேட்டர் மும்பை
4. திருப்தி,
5. சண்டிகர்
6. தானே
7. ராய்பூர்,
8. இந்தோர்,
9. விஜயவாடா,
10. போபால்
தமிழ்நாட்டில் இருந்து ஒரு நகரம் கூட முதல் பத்து இடத்தை பிடிக்கவில்லை. ஆனால் 12 வது இடத்தில் திருச்சியும், 14 வது இடத்தில் சென்னையும் இடம் பெற்றுள்ளது.