சுமார் 21 நிமிடங்களில் தக்க பதிலடி...!! எப்படி சாத்தியமானது தாக்குதல்..!!

எத்தனை நிமிடம் தாக்குதல் நடத்தப்பட்டது. எத்தனை போர் விமானங்கள் ஈடுபட்டன என்பதை பார்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 26, 2019, 02:47 PM IST
சுமார் 21 நிமிடங்களில் தக்க பதிலடி...!! எப்படி சாத்தியமானது தாக்குதல்..!!  title=

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்திய புல்வாமா தற்கொலை படை தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 12 நாட்களாக பதிலடி குறித்து ஆலோசனை மற்றும் அதற்க்கான செயல்பாடுகளை குறித்து நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வந்தது. 

இந்தநிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்ட வந்த முகாம்கள் மீது இந்திய ராணுவம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை வீசியது. 

எத்தனை நிமிடம் தாக்குதல் நடத்தப்பட்டது. எத்தனை போர் விமானங்கள் ஈடுபட்டன என்பதை பார்போம்.

> இன்று அதிகாலை இந்திய மிராஜ் 2000 போர் விமானம் இந்தியாவில் இருந்து புறப்பட்டது. மொத்தம் 12 போர் விமானங்கள் சென்றன.

> முதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பாலகோட் பகுதியில் சுமார் 8 நிமிடம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் அதிகாலை 3.45 மணி முதல் 3.53 மணிவரை நடந்தது. 

> அதன் பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள முஷாபரா பாத் பகுதியில் சுமார் 7 நிமிடம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் அதிகாலை 3.48 மணி முதல் 3.55 மணிவரை நடந்தது.

> கடைசியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள சகோட்டி பகுதியில் சுமார் 6 நிமிடம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் அதிகாலை 3.58 மணி முதல் 4.04 மணிவரை நடந்தது.

> சுமார் 21 நிமிடங்கள் நடந்த பதிலடி தாக்குதலில், அந்த பகுதியில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிக்கபட்டது. இந்த தாக்குதலில் 7 விதமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என கூறப்பட்டு உள்ளது.

> ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி மசூத் அசாரின் மாமனார் உட்பட பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 12 பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன எனவும் கூறப்படுகிறது.

Trending News