21:31 01-03-2019
IAF Wing Commander #AbhinandanVarthaman was accompanied by IAF Group Captain Joy Thomas Kurien, Defence Attache to Indian High Commission in Pakistan. https://t.co/CWNiLvYFgU
— ANI (@ANI) March 1, 2019
21:21 01-03-2019
நீண்ட தாமத்திற்கு பிறகு அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைத்த பாகிஸ்தான்.
IAF Wing Commander #AbhinandanVarthaman at Wagah-Attari border, to cross border soon to enter India. pic.twitter.com/a1hVjwroVw
— ANI (@ANI) March 1, 2019
IAF Wing Commander #AbhinandanVarthaman at Wagah-Attari border pic.twitter.com/WGz0LaNvX3
— ANI (@ANI) March 1, 2019
21:11 01-03-2019
மாலை 6 மணியளவில் விங் கமாண்டர் அபிநந்னை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு முறை நேரத்தை மாற்றி அமைத்தது பாகிஸ்தான். தற்போது இரவு 9 மணி ஆகியும் இன்னும் அவர் ஒப்படைக்கப்படவில்லை.
21:08 01-03-2019
Sources: Pakistan has changed the timing of handover of IAF's Wing Commander #AbhinandanVarthaman twice. Indian defence minister is keeping a close watch on proceedings. The handover might now take place at 9 pm tonight. pic.twitter.com/2GUIzhrP89
— ANI (@ANI) March 1, 2019
18:36 01-03-2019
வாகா எல்லையில் இருந்து இந்திய அதிகாரிகளுடன் வெளியேறிய அபிநந்தன். அம்ரித்சரில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைவார்.
16:45 01-03-2019
எல்லையில் தற்போதைய காட்சிகள்: விங் கமாண்டர் அபிநந்னை வரவேற்க இந்திய விமானப்படை குழு
Visuals from Attari-Wagah border; Wing Commander #AbhinandanVarthaman to be received by a team of Indian Air Force. pic.twitter.com/C4wv14AEAd
— ANI (@ANI) March 1, 2019
16:26 01-03-2019
Pakistan: Visuals from Wagah in Lahore; IAF Wing Commander #AbhinandanVarthaman will soon be handed over to the Indian Air Force at Attari-Wagah border pic.twitter.com/xEPghVgNzi
— ANI (@ANI) March 1, 2019
16:12 01-03-2019
இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தனை ஒப்படைக்க உள்ளனர் பாகிஸ்தான் அதிகாரிகள்
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான் விமானம் எப்16 இந்தியாவின் வான் எல்லையில் பறந்தது. அவர்களை பின்தொடர்ந்து துரத்தி இந்திய மிக் 21 ரக விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் விமானத்தை விழ்த்தியது. பின்னர் திரும்பும் வழியில் இந்திய விமானத்தை பாகிஸ்தான் தாக்கியது. அதன்மூலம் அந்த விமானத்தில் இருந்த அபிநந்தனின் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார். மற்ற ஐந்து மிக் விமானங்கள் பத்திரமாக நாடு திரும்பியது.
ஜெனிவா போர்முறை ஒப்பந்தங்களின்படி கைது செய்யப்படும் போர் கைதிகளை திருப்ப சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது விதி. அபிநந்தனை விடுவிக்கக் கோரி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றது. இந்தியாவும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைப்படி பிடிபட்ட கைதிகளை விடுவிக்க வேண்டும். எனவே பாகிஸ்தான் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் விதிக்கு கட்டுப்பட்டு அபிநந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தது. அபிநந்தனை பாதுகாப்பாக விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகளும் வலியுறுத்தியதோடு, பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
இதன்மூலம் பின்வாங்கிய பாகிஸ்தான், அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிய, நமது விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்தார்.
இந்தநிலையில், இன்று விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் நாடு திரும்புகிறார். அவரை வரவேற்க்க நாடு முழுவதும் உள்ள மக்கள் தயாராக உள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் வாகா எல்லையில் ஏராளமானோர் அவரை வரவேற்க்க குவிந்துள்ளனர். பாதுக்காப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.