இந்தியாவில் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் பிறழ்வு 3வது அலைக்கு வித்திடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேலும் முடுக்கவிடப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஆபத்து இன்னும் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி செலுத்தாதவர்கள் கூட, ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
ALSO READ | ’ஒமிக்ரானை எதிர்கொள்ள ஆயத்தமாவோம்’ பிரதமர் மோடி உரை
டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் 100 விழுக்காடு தடுப்பூசியை செலுத்தி முடித்திருக்கின்றன. ஏறத்தாழ முதல் டோஸ் தடுப்பூசியை 70விழுக்காடுக்கும் மேற்பட்ட மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை முதல் டோஸ்கூட செலுத்தாத மழைவாழ் மற்றும் கிராமப்புற மக்களை அடையாளம் கண்டு, சுகாதரப் பணியாளர்கள் அந்தப் பகுதிக்கே சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
संकल्प और कर्तव्यनिष्ठा का संगम।
राजस्थान के बाड़मेर जिले में टीकाकरण अभियान की तस्वीरें।#HarGharDastak pic.twitter.com/p2nngJvrhy
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 24, 2021
அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் ஒட்டகத்தின் மீது பயணித்து தார் பாலைவனத்தில் இருக்கும் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறார். அவரின் இந்தப் புகைப்படம் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சுகாதாரப் பணியாளரின் புகைப்படத்தை பதிவிட்டு, செவிலியரின் அர்ப்பணிப்பை மனதார பாராட்டியுள்ளார். இதேபோல், பலரும் அந்த செவிலியிருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
ALSO READ | Omicron Variant: அலட்சியப்படுத்த வேண்டாம், இதுதான் அறிகுறிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR