டெல்லி பேருந்தில் பேய்? சிசிடிவியில் மட்டும் தெரிந்த விசித்திரம் - ஷாக்கான நடத்துநர்!

Delhi Viral Video: டெல்லி பேருந்து ஒன்றில் மனித உருவம் ஒன்று இருக்கையில் அமர்ந்திருப்பது சிசிடிவி வீடியோவில் மட்டும் பதிவாகியிருந்தது. இதுகுறித்து சம்பவ இடத்தில் பேருந்து நடத்துநர் எடுத்ததாக கூறப்படும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 15, 2024, 02:37 PM IST
  • பேய், அமானுஷ்யம் குறித்து வீடியோ பரவுவது புதியதல்ல.
  • அதுவும் டெல்லியில் இதேபோல் ஒரு வீடியோவும் சில நாள்களுக்கு முன் பரவியது.
  • இதனால், மக்கள் அச்சமடைய வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி பேருந்தில் பேய்? சிசிடிவியில் மட்டும் தெரிந்த விசித்திரம் - ஷாக்கான நடத்துநர்! title=

Delhi Viral Video: கடவுள் இருக்காரா இல்லையா...? பிரபஞ்சத்தில் ஏலியன்கள் யாரும் இருக்கிறார்களா...? நாம் உயிரிழந்ததற்கு பின்னர் என்ன ஆகும்...? உலகில் பேய் இருக்கிறதா, இல்லையா...? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடைக்கான மனித இனம் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது எனலாம். அது என்ன முயற்சிகள் என்பது ஒருபுறம் இருக்கட்டும், இந்த விஷயங்களை சினிமாவின் கதைக்கரு அமைத்தால் அருமையாக கல்லா கட்டிவிடலாம் என்பது நிச்சயம்.

இப்போதும் தமிழ் சினிமாவில் அம்மன் படங்கள், ஏலியன் சார்ந்த படங்கள், மறு ஜென்மத்தில் நாயகனும் நாயகியும் இணையும் படங்கள், பேய் பங்களா படங்கள் ஆகியவை தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதைபோன்ற படங்கள் எத்தனை முறை வந்தாலும் மக்கள் பார்ப்பார்கள், பார்க்கிறார்கள். ஏனென்றால், இவற்றில் கிடைக்கும் சுவாரஸ்யம் அதிகம். மேலும், அதுகுறித்த செய்திகளையும் மக்கள் ஆர்வமாக பார்ப்பார்கள். அப்படிதான் நீங்களும் இதன் தலைப்பை பார்த்துவிட்டு உள்ளே வந்திருப்பீர்கள் அல்லவா...

டெல்லி பேருந்து வீடியோ வைரல்

அந்த வகையில், டெல்லி பேருந்து ஒன்றில் பேய் நடமாட்டம் இருப்பது சிசிடிவியில் பதிவாகியிருப்பதாக ஒரு வீடியோ தொடர்ந்து வைரல் ஆகி வருகிறது. காலியாக இருந்த பேருந்தில் ஒருவர் எடுத்த அந்த வீடியோதான் பேய் குறித்து தற்போது பலரையும் பயத்தை கொடுத்துள்ளது. நிச்சயம் நீங்களும் அந்த வீடியோவை பார்க்கும்போது சற்று பயப்படுவீர்கள்.  அந்த வீடியோ குறித்து இங்கு விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோவில் தெரு விளக்குகள் திருட்டு

இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பேருந்தின் சிசிடிவியில் மட்டும் தெரியும் ஒரு மனித உருவம்தான் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது. அந்த பேருந்தின் நடத்துநர் வழக்கம்போல் பேருந்தை பார்வையிட்டு வந்துள்ளார். அப்போது வினோதமாக ஒன்றை பார்த்த உடன் தனது மொபைலில் அந்த வீடியோவை எடுத்துள்ளார். அதில் நடத்துநர் இருக்கையில் ஒரு உருவம் உட்கார்ந்திருப்பது பேருந்தின் சிசிடிவி வீடியோவில் மட்டும் தெரிகிறது, ஆனால் நேரில் பார்க்கும்போது அந்த இருக்கையில் யாரும் இல்லை. இது அந்த பேருந்து நடத்துநரை மட்டுமில்லாமல் சமூக வலைதள பயனர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இன்ஸ்டாகிராம் வீடியோ:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bien_forever (@bien_forever)

இது முதல்முறையல்ல...

இருப்பினும், அது பேயா இல்லையா என்பதை நம்மால் உறுதிப்படுத்த இயலாது. இதுகுறித்து வேறு எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. அந்த வீடியோவில் வெள்ளை நிறத்தில் ஒரு மனித உருவம் இருக்கையில் அமர்ந்திருப்பது மட்டும் பேருந்தில் இருந்த சிசிடிவியின் திரையில் தெரிந்தது. அவர் உடனே சீட்டை காட்டியபோது அங்கு யாரும் இல்லை. மேலும், அந்த சிசிடிவி கேமரா வேலை செய்கிறதா இல்லை என்பதும் தெரியவில்லை. எனவே, அதை உறுதிப்படுத்தாமல் எதையும் இறுதியாக சொல்லவே முடியாது. 

இந்த வீடியோவின் கமெண்டிலும் பலர் அதைதான் தெரிவிக்கின்றனர். அந்த சிசிடிவி திரையில் பழைய வீடியோ தெரியலாம் என்கின்றனர். இதுபோல் டெல்லியில் பேய் குறித்த வீடியோ பரவுவது முதல்முறையல்ல. சில நாட்களுக்கு முன்பு டெல்லி பேருந்து ஒன்றில் முகமே இல்லாத ஒரு பெண்ணின் வீடியோவும் பரவியது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

மேலும் படிக்க | மருமகளை திருமணம் செய்த மாமியார்! லவ் ஸ்டோரி இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News