புதுடெல்லி: டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. தலைநகர் டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) தொடர்ந்து மோசமான வகையிலேயே தொடர்கிறது என்று காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (System of Air Quality and Weather Forecasting and Research (SAFAR)) இன்று (நவம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. இன்று காலை 6:15 மணிக்கு SAFAR வெளியிட்ட பகுப்பாய்வின்படி, டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் 'மோசமான’ பிரிவில், AQI 436 ஆக உள்ளது.
காற்று மாசுபாட்டில் PM 2.5-இன் செறிவு 318 ஆக இருந்தது. PM 10 இன் எண் 448 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் SAFAR வெளியிட்டுள்ள காற்றுத் தர மதிப்பாய்வின்படி, டெல்லியின் AQI ஆனது 'மிகவும் மோசமான' வகையிலேயே தொடர்கிறது.
இருப்பினும், இது நேற்று இரவு, (நவம்பர் 06, சனிக்கிழமை) இருந்த காற்றின் தரம் AQI 437 உடன் ஒப்பிடும்போது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. "காற்றின் மேற்பரப்பு வலுவடைந்து வருகிறது" (surface winds are becoming stronger) என்ற வகையிலேயே காற்று மாசு தொடர்கிறது. இது காற்று மாசுபாடுகளை சிதறடித்து, பரவலாக்குகிறது.
Also Read | திரிபுரா: வன்முறை தொடர்பாக 102 பேர் மீது வழக்கு; சமூக ஊடகங்களுக்கு நோட்டீஸ்
AQI என்பது காற்றுத் தரக் குறியீடாகும். இது எண்களின் குறிப்பிடப்படுகிறது. அதில், 0-50க்கு இடைப்பட்ட காற்றின் தரம் சிறப்பானதாகவும், 51-100 திருப்திகரமாகவும், 101-200 மிதமானதாகவும், 201-300 மோசமானதாகவும், 301-400 மிக மோசமானதாகவும், 401-500 கடுமையான/அபாயகரமானதாகவும் கருதப்படுகிறது.
நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள், உயிரியற் பொருட்கள் போன்றவை வளிமண்டலத்தில் கலப்பதால் காற்றை மாசுகிறது. காற்று மாசு அதிகரிக்கும் நோய்கள், ஒவ்வாமை, ஆயுள் குறைவு போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகிறது.
மனிதர்கள் செய்யும் தவறுகளால் ஏற்படும் மாசுபாடு, மனித சமுதாயத்தை பாதிப்பதோடு, மாசுக்கு காரணமேயில்லாத, விலங்குகள், தாவரங்கள் என உலக உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.
இயற்கை மாசுபடுவதால் ஏற்படும் காற்று மாசுபாட்டினால், சுவாசிக்க தரமான காற்று கிடைக்காமல் போகிறது. மக்கள் தொகைப் பெருக்கம், வாகனங்கள் பயன்பாடு அதிகரிப்பு, மரங்கள் அழிப்பு, அணுகுண்டு தாக்குதல், அமிலம் மற்றும் வேதிப்பொருட்களின் பயன்பாடு என மனிதர்களின் செயல்பாடுகளும், சில இயற்கை நடவடிக்கைகளும் காற்று மாசு ஏற்படக் காரணமாகின்றன.
Also Read | அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR