இந்தியாவில் ஐபிஎல் தொடர் 2008ம் ஆண்டு அறிமுகமானது. 2007ல் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றவுடன் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது.
அந்த சமயத்தில் ரசிகர்களுக்கு ஐபிஎல் பற்றிய பெரிய ஆர்வம் இல்லாததால் ஒவ்வொரு அணியும் அந்த ஊர் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் ஒரு வீரரை தேர்வு செய்யலாம் என்று பிசிசிஐ தெரிவித்து இருந்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் சச்சின் டெண்டுல்கரை முதன்மை வீரராக தேர்வு செய்தது. கேகேஆர் கங்குலியையும், ஆர்சிபி ராகுல் டிராவிட்டையும், பஞ்சாப் கிங்ஸ் யுவராஜ் சிங்கையும் தேர்வு செய்தனர்.
இந்நிலையில் சேவாக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்மை வீரராக தேர்வு செய்ய பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் டெல்லி அணி முந்திக்கொண்டு சேவாகை முதன்மை வீரராக தேர்ந்தெடுத்தது.
பிறகு ஏலத்தில் தோனியை எடுக்க 8 அணிகளும் போட்டிபோட்டன. ஒருகட்டத்தில் தோனியின் விலை 7 கோடியை தாண்டியது. இதனால் ஒவ்வொரு அணிகளாக பின்வாங்க தொடங்கின.
ஆனாலும் சென்னை மற்றும் மும்பை இடையே கடும் போட்டி நிலவியது. ரூ.12 கோடி என்ற மதிப்பிற்கு வந்ததும், இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை ஏலத்தில் எடுத்தது.