வயதில் குறைந்தவரை திருமணம் செய்து கொண்டால் பெண்ணிற்கு நன்மை! எப்படி தெரியுமா?

Benefits Of Women Marrying Younger Men: பெண்கள் பலர், தன்னை விட வயதில் குறைந்தவரை திருமணம் செய்து கொள்ள தயக்கம் காட்டுவர். ஆனால், இதில் பலவித நன்மைகள் இருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Nov 23, 2024, 04:47 PM IST
  • வயதில் அதிகமான பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள்
  • இதனால் பெண்களுக்குதான் பலன் அதிகம்..
  • எப்படி தெரியுமா?
வயதில் குறைந்தவரை திருமணம் செய்து கொண்டால் பெண்ணிற்கு நன்மை! எப்படி தெரியுமா?  title=

Benefits Of Women Marrying Younger Men: நட்பு, காதல், திருமணம் என அனைத்திற்கும் நாம் வாழும் சமூகம் ஒரு கட்டமைப்பை வித்தித்துள்ளது. அதற்குள் இருக்கும் வரை மட்டுமே, இங்கு எந்த உறவாக இருந்தாலும் அதற்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கப்படுகிறது. அப்படி, பெண்களுக்காக கட்டமைக்கப்பட்ட ஒன்று, தன்னை விட வயதில் அதிகமான நபரை மட்டும் திருமணம் செய்ய வேண்டும் என்பது. 

பிரியங்கா சோப்ரா, நயன்தாரா போன்ற நடிகைகள் தங்கள் மனதின் சொல்படி கேட்டு, தன்னை விட வயதில் குறைந்த ஆணை திருமணம் செய்து கொண்டாலும், அவர்களையும் குத்தம் சொல்லி வருகிறது இந்த உலகம். தன்னை விட வயதில் குறைந்த ஆண்களை காதலிப்பதாலோ, திருமணம் செய்து கொள்வதாலோ பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா? 

1.புதிய பார்வை:

வயதில் குறைவான ஆண்கள், வாழ்க்கை குறித்த விஷயங்களை புதிய பார்வையில் இருந்து பார்ப்பர். ஒரு ரிலேஷன்ஷிப்பில் ஒருவர் இப்படி, இன்னொருவர் இன்னொரு மாதிரியும் இருந்தால், பல சமயங்களில் இக்கட்டான விஷயங்களை பேலன்ஸ் செய்ய முடியும். இதனால், அந்த உறவு எப்போதும் இளமையாக இருப்பது போல இருக்கும். இதனால், பெண்கள் பலர் தங்களுக்கு புதிதான பல விஷயங்களை செய்ய முனைவர். புதுவித அனுபவங்களும் கிடைக்கும். 

2.உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்தல்:

வயதில் குறைந்த ஆண்களிடம் நம் மனதில் இருக்கும் விஷயங்களை இலகுவாக கூற முடியும், உணர்ச்சிகளை எந்த இக்கட்டும் இல்லாமல் வெளிப்படுத்த முடியும். தங்களின் துணையின் உணர்ச்சிகளை கேட்பதோடு மட்டுமன்றி, இவர்கள், தங்களின் உணர்ச்சிகள் குறித்தும் ஓபனாக இருக்கின்றனர். மாடர்னாகவும் இவர்கள் யோசிப்பதால், பாலின சமத்துவம் மற்றும் சமநிலையான உறவுகள் உள்ளிட்ட நவீன கருத்துக்களுக்கும் அவர்கள் மரியாதை கொடுக்கின்றனர். 

3.புதிய மாற்றங்கள்:

பெண்கள், தன்னை விட வயது அதிகமாக இருக்கும் நபரை டேட் செய்யும் போது அவர்களது கருத்துகள் மிகவும் பிற்போக்காக இருப்பதாக யோசிக்கின்றனர். ஆனால், வயதில் குறைந்த ஆண்களை டேட்டிங் செய்யும் போது இது போன்ற விஷயங்கள் அவர்களுக்கு தோன்றுவதில்லை. காரணம், புதிய ட்ரெண்ட், டெக்னாலஜி, சமூகத்தின் மீதான பார்வை பெண்களுக்கு மாறிக்கொண்டே இருக்கும். வயதில் இளைய ஆண்கள், இதை எளிதில் புரிந்துகொள்ள கூடியவர்களாக இருப்பர். மேலும், இப்படி வயதில் குறைந்த ஆண்கள் முற்போக்காகவும் யோசிப்பர். கூடவே, தனது துணையை மதிக்கவும் செய்வர்.

மேலும் படிக்க | பெண்களுக்கு தன்னை விட வயது அதிகமான ஆண்களைதான் பிடிக்கும்! ஏன் தெரியுமா?

4.உடல் நலனில் கவனம்:

தன்னை விட இளம் வயது ஆண்களை டேட்டிங் செய்யும் பெண்கள், தங்கள் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்துவார்களாம். காரணம், இளம் வயது ஆண்களும் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக இருக்கின்றனர். இவர்களது பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும் அவர்கள் துணைக்கும் தொற்றிக்கொள்கிறது. 

5.கலாச்சார அழுத்தம்:

ஒரு ரிலேஷன்ஷிப்பில், பெண்ணை விட வயதில் இளமையாக இருக்கும் ஆண், பெரும்பாலும் கலாச்சாரம் கொடுக்கும் அழுத்தத்தில் இருந்து விலகியே இருப்பார். இதனால், இவர்களது உறவில் இருவரும் சுதந்திரமாக இருப்பது போல உணருவர். 

6.வளர்ச்சி:

இந்த வயது வித்தியாசம், பெண்-ஆண் இருவரையுமே தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக வளர்ச்சி பெற வைக்கும். இதனால், இருவருக்கும் முதிர்ச்சியான மனநிலை மேம்படும். இருவரும் சேர்ந்து ஏற்படுத்திக்கொள்ளும் அனுபவத்தால், நல்ல புரிந்துணர்வும் இருவருக்குள்ளும் ஏற்படும்.

மேலும் படிக்க | வயதில் மூத்த பெண்களை விரும்பும் மெஜாரிட்டி ஆண்கள்... ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News