சமீபகாலமாக மக்கள் பலரும் சைவ உணவு சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர், சைவ உணவு உண்ணும் போக்கு அதிகரித்து வருவதால் சிலர் மாடுகளிலிருந்து பெறப்படும் பாலை கைவிட நினைக்கின்றனர். அப்படி முழுவதும் சைவமாக மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கு சோயா பால் சிறந்தது. இந்த பால் சோயாபீன்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இதில் உங்களுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இந்த சோயா பால் குறைந்த கலோரிகள், அதிக புரதம், கால்சியம் மற்றும் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாக காணப்படுகிறது. லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு சோயா பால் ஆரோக்கியமான பால் மாற்றாகும். சோயா பால் குடிப்பதால் நமது உடலுக்கு என்ன வகையான ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும் என்பதை பின்வருமாறு காணலாம்.
1) சோயா பால் குடிப்பதால் உங்கள் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது மற்றும் கால்சியத்தின் சிறந்த மூலமாக உள்ளது. சோயா பால் தொடர்ந்து உட்கொள்வது ஆரம்பகால மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கும் என்றும் பல ஆய்வுகள் காட்டுகிறது.
மேலும் படிக்க | இரவில் தூக்கம் வரவில்லையா? காலையில் எழுந்ததும் இதை மட்டும் செய்யுங்கள்!
2) இதயத்திற்கு நன்மையளிக்கும் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் சோயா பாலில் உள்ளது. இது பிளாஸ்மா லிப்பிட் அளவை மேம்படுத்த உதவுகிறது மற்றும் எதிர்காலத்தில் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
3) சோயா பாலில் அதிகளவு புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது உங்கள் எடை இழப்புக்கு ஏற்ற சிறந்த பானமாக இருக்கிறது. உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சோயா பாலை குடித்து வர நல்ல பலனை பெறலாம். சோயா பால் தினமும் குடித்துவர உங்கள் உடலிலுள்ள கூடுதலான எடையை குறைக்கலாம்.
4) முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது, முடி உதிர்வால் அவதிப்படுபவர்கள் தினமும் சோயா பாலை குடித்துவர நல்ல பலனை பெறலாம். புரதச்சத்து அதிகம் நிறைந்த சோயா பாலை நீங்கள் குடித்துவர உங்கள் முடி வளர்ச்சியை இது தூண்டும்.
5) சருமத்தில் ஹைப்பர் பிக்மென்டேஷன் உள்ள நபர்களுக்கு சோயா பால் சிறந்த தீர்வினை அளிக்கிறது மற்றும் இதனால் உங்கள் சரும ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் சோயா பால் இறந்த சரும செல்களை புதுப்பிக்கவும், சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும், முகத்திலுள்ள கரும்புள்ளிகளை அகற்றவும், தோல் நிறமற்றதை சரிசெய்யவும் பயன்படுகிறது.
மேலும் படிக்க | குளிர்கால முலாம்பழம் ‘வெண் பூசணிக்காய்’ ஆரோக்கிய நன்மைகள்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ