வீட்டிலேயே வாழைப்பழ ஃபேஷியல்: அழகான, பளபளப்பான மற்றும் மென்மையான சருமத்தை பெற வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம். இதற்காக நாம் பல்வேறு வகையான பொருட்களை பயன்படுத்துகிறோம். இதனுடன் பல வித அழகு சாதனங்களையும் கிரீம்களையும் பலரும் பயன்படுத்துகிறார்கள். எனினும் இவற்றில் பல ரசாயனங்கள் இருப்பதால், இவற்றால் சருமத்துக்கு பல வித தீங்குகள் ஏற்படுகின்றன. சிலர் ஃபேஷியல் மூலம் சரும பொலிவை பெற முயற்சி செய்கிறார்கள். ஃபேஷியல் செய்வதால், முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, இறந்த சரும செல்கள் எளிதில் அகற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் சருமத்தின் பொலிவும் அதிகரிக்கும்.
எனினும் பார்லர் சென்று ஃபேஷியல் செய்வது அனைவருக்கும் முடியாமல் போகலாம். இதில் ஆகும் செலவை சிலரால் ஏற்க முடியாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வேண்டுமானால் வீட்டிலேயே வாழைப்பழத்தை வைத்து ஃபேஷியல் செய்யலாம். இது உங்கள் முகத்திற்கு கூடுதல் பொலிவை அளிக்கும். வீட்டிலேயே எப்படி ஃபேஷியல் செய்வது என்பதை இங்கே காணலாம்.
வீட்டிலேயே வாழைப்பழ ஃபேஷியல் செய்வது எப்படி?
முகத்தை சுத்தம் செய்தல்:
வீட்டில் வாழைப்பழ ஃபேஷியல் செய்ய முதலில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். இதற்குப் பிறகு, ஹைட்ரேட்டிங் க்ளென்சர் உதவியுடன் முகத்தை சுத்தம் செய்யவும். இதன் மூலம் முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் தூசிகள் அனைத்தும் எளிதில் நீங்கிவிடும். இதற்குப் பிறகு, முகத்தின் அடுத்த கட்டத்திற்கு தோல் தயாராக இருக்கும்.
மேலும் படிக்க | Heart Health: இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்கள்
வாழைப்பழ முக ஸ்க்ரப்:
முகத்தை சுத்தம் செய்த பிறகு முகத்தை ஸ்க்ரப்பிங் செய்ய வேண்டும். ஸ்க்ரப் செய்ய, நீங்கள் பால் பவுடரை முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ரவை, எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இப்போது ஒரு வாழைப்பழத் தோலை எடுத்து, இந்தக் கலவையை தோலின் மீது தடவவும். அதை முகம் முழுவதும் நன்றாக தேய்க்கவும். இதற்குப் பிறகு, 5 நிமிடங்களுக்கு கைகளால் லேசாக ஸ்க்ரப் செய்த பிறகு, தண்ணீர் கொண்டு முகத்தை கழுவவும். இது முகத்தை ஆழமாக சுத்தம் செய்வதோடு, இறந்த சரும செல்களும் அகற்றப்படும். இது முகத்திற்கு இயற்கையான பொலிவை தரும்.
வாழைப்பழ மசாஜ் கிரீம்:
ஸ்க்ரப்பிங் செய்த பிறகு, ஃபேஷியலின் அடுத்த கட்டம் முக மசாஜ் ஆகும். இதற்கு அரை வாழைப்பழம், தேன், எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் தயிர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போடவும். இவை அனைத்தையும் நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். அதன் பிறகு இந்த கலவை கொண்டு உங்கள் முகத்தை மசாஜ் செய்யவும். இது முகத்தை மென்மையாக மாற்றும்.
வாழைப்பழ ஃபேஸ் பேக்:
வாழைப்பழத்தில் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. வாழைப்பழம் சருமத்தின் வறட்சியை நீக்க உதவுகிறது. இதனுடன், இது முகப்பரு மற்றும் மருக்களை நீக்குகிறது. வாழைப்பழ ஃபேஸ் பேக் செய்ய, ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு தோல் தூள், அரை வாழைப்பழம், தேன், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் அனைத்தையும் நன்கு கலந்து, நன்றாக பேஸ்ட் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ