பாதாம் பிசினால் ஏற்படும் நன்மைகள் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
பாதா மரத்தில் இருந்து பெறப்படும் பாதாம் பிசின் உடலுக்கு குளிச்சியை தருகிறது. இது ஆண், பெண் இருவருக்குமே மிகவும் நல்லது.
பாதாம் பிசின் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை, அல்சர், அசிடிட்டி, அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை தடுக்கலாம். பாதாம் பிசினில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்பு, மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் உள்ளன.
தினமும் பாதாம் பிசின் சாப்பிடுவதால் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.
பாதாம் பிசின் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டிருப்பதால் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. பாலுடன் கலந்து குடிக்கும்போது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
பாதாம் பிசின் நமது சருமத்தைப் பாதுகாக்கிறது. அதேபோல் வயது மீறிய முதுமைத் தோற்றம், தோல் ஒவ்வாமை உள்ளிட்டவையை தடுக்கிறது.
பாதாம் பிசின் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் மத்திய நரம்பு மண்டலம் மற்றும் எலும்புகள் வலுப்பெற உதவுகிறது. இதில் ஆன்டி-ஆக்சிடென்ட்கள், மினரல்கள், புரதச்சத்து ஆகியவை உள்ளன.
பாதான் பிசினை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது. இதனால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை பாதாம் பிசின் சரி செய்கிறது. இதனைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.