Tamarind குண்டான உடலை இளைக்க வைக்க சூப்பர் எஃபெக்ட் புளி வைத்தியம்

அறுசுவைகளில் புளிப்பு சுவரை நாக்கைச் சப்புக் கொட்ட வைப்பது. புளி என்ற பெயரைச் சொன்னவுடனே வாயில் எச்சில் சுரக்கும். நமது தினசரி உணவின் சுவையை அதிகரிக்க புளியின் பயன்பாடு அதிகமாகவே இருக்கிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 21, 2022, 07:31 AM IST
  • புளியின் எடை குறைப்பு தன்மை
  • புளிப்பாக இருந்தால் என்ன கொழுப்பைக் குறைக்கும் புளி
  • செரிமானத்தை சீர்செய்யும் புளி
Tamarind குண்டான உடலை இளைக்க வைக்க சூப்பர் எஃபெக்ட்  புளி வைத்தியம் title=

அறுசுவைகளில் புளிப்பு சுவரை நாக்கைச் சப்புக் கொட்ட வைப்பது. புளி என்ற பெயரைச் சொன்னவுடனே வாயில் எச்சில் சுரக்கும். நமது தினசரி உணவின் சுவையை அதிகரிக்க புளியின் பயன்பாடு அதிகமாகவே இருக்கிறது.

உணவின் சுவைக்கு பயன்படுத்தப்படும் புளியை உடல் எடையை குறைக்க பயன்படுத்தலாம் என்பது தெரியுமா? ஆச்சரியமாக இருந்தாலும் இதுதான் உண்மை. 

உடல் எடையைக் குறைக்க புளித் தண்ணீரைக் குடிக்கிறார்கள் பலர் என்பது தெரியுமா? புளி (Tamarind for weight Loss) மட்டுமல்ல, அதன் விதையான புளியாங்கொட்டை இரண்டுமே பருமனை குறைக்க பயன்படுகின்றன.

ஆனால், புளி எப்படி நம் எடையைக் குறைக்கும் என்பதுதான் சிந்திக்க வேண்டிய விஷயம். புளியில் புளிப்புத்தன்மையுடன் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது, இது எடை இழப்புக்கும் உதவியாக இருக்கும் (Tamarind benefits for weight loss) இது தவிர, பசியை குறைக்க உதவும் புளி, அதிக உணவை சாப்பிடாமல் தடுக்கிறது.

இதைவிட முக்கியமான ஒன்று, புளி நமது ஹார்மோன் ஆரோக்கியத்தையும் சரிசெய்கிறது. உடல் எடையை குறைப்புக்கு புளி எப்படி உதவுகிறது? தெரிந்து கொள்வோம்.

health

எடை இழப்பில் புளியின் பங்கு
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் புளி
புளி சாப்பிடுவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். உண்மையில், புளியை சாப்பிடும்போது, ​​அது தாகத்தை அதிகரிக்கிறது மற்றும் வாயில் எச்சிலை ஊற வைக்கிறது.

நமது உமிழ்நீர்,வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, குடல் இயக்கத்தையும் துரிதப்படுத்துகிறது. நமது குடல்களை சுத்தப்படுத்தும் தன்மை கொண்ட புளி, உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, வளர்சிதை மாற்ற விகிதத்தை துரிதப்படுத்துவதால் புளி எடை இழப்புக்கு உதவுகிறது.

மேலும் படிக்க | Toothache: பல் வலியா? உடனடி தீர்வு இதோ

பசியைக் கட்டுப்படுத்தும் புளி

புளியில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அவை தேவையற்ற பசியைக் குறைக்கவும், தேவையற்ற உணவைத் தவிர்க்கவும் உதவுகிறது. புளி நமது மனதை உற்சாகமாக வைக்கும் தன்மையைக் கொண்டது.

புளியில் நார்ச்சத்து, பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் ஈ, வைட்டமின் பி, இரும்பு, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் என பல சத்துக்கள் உள்ளன. கொழுப்பை எரிக்க உதவும் இவை, உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் வல்லவை. அதுமட்டுமல்ல, இந்த சத்துக்கள் உடலின் கொழுப்பை குறைக்கும் தன்மையைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.  

செரிமானத்திற்கு உதவும் புளி
நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாவிட்டால், அது மோசமான வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் உடன் எடையும் அதிகரிக்கலாம். எனவே, உணவை ஜீரணிக்க, உங்கள் உடலில் செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

மேலும் படிக்க | எலுமிச்சை விலை அதிகமானால் என்ன

உண்ணும் உணவை செரிமானம் செய்ய புளி மிகவும் உதவிசெய்கிறது. செரிமானத்திற்கு தேவையாகும் ரசாயனங்களை உடலில் உற்பத்தி செய்ய புளி உதவுகிறது. இதன் மூலம், வயிற்றுப் பிரச்சனைகளுடன் உடல் பருமனைத் தவிர்க்கலாம்.

செரோடோனின் எனப்படும் நரம்பியக்கடத்திகளின் அளவை அதிகரிக்கும் தன்மை புளியில் உள்ளது. செரோடோன் மனதை அமைதிப்படுத்தும், தூக்கத்தை அதிகரிக்கும். மன அழுத்தம் அதிகருக்கும்போது உடல் எடையும் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் ஆழ்ந்த தூக்கம் என்ற இரு அடிப்படை தேவைகளை தேர்ந்தெடுத்தால் பருமன் குறையும். இதற்கு புளியின் தயவும் நமக்குத் தேவை.

மேலும் படிக்க:ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கீரையின் அற்புத நன்மைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News