மாரடைப்பு ஆபத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியலாம் : விஞ்ஞானிகள்

உயிருக்கு மிகவும் ஆபத்தான இதய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 24, 2022, 01:06 PM IST
  • மாரடைப்பு ஆபத்தை ரத்த பரிசோதனை மூலம் முன்பே கண்டறியலாம்.
  • விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் வெளியான தகவல்.
  • கோடிக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்ற முடியும்.
மாரடைப்பு ஆபத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியலாம் : விஞ்ஞானிகள் title=

உலக அளவில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், மாரடைப்பினால் இள வயதிலேலேயே இறக்கும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும், தவறான உணவு பழக்கத்தினாலும்,  இளைஞர்களை இதயநோய் அதிக அளவில் பாதிக்கிறது. ஆனால் இந்த ஆபத்தை நீங்கள் சரியான நேரத்தில் அடையாளம் காணலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

மாரடைப்பு ஆபத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியலாம்

தற்போது விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் மாரடைப்பு அபாயத்தை சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய முடியும் என்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இதய நோய்களால் ஏற்படும் உயிரிழப்பு அபாயம் வெகுவாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில்  வெளியான ஆச்சர்ய தகவல்

நாள்பட்ட மாரடைப்பு நோயாளிகளின் சி-ரியாக்டிவ் புரதத்தை ( CRP)விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். ட்ரோபோனின் நிலையை அறியும் பரிசோதனையும் செய்யப்பட்டது. ட்ரோபோனின் என்பது ஒரு சிறப்பு புரதம். இது இதயம் பாதிக்கப்படும் போது, இரத்தத்தில் இருந்து வெளியிடப்படுகிறது. விஞ்ஞானிகள் மேற்கொண்ட ரத்த பரிசோதனையில், 2.5 லட்சம் நோயாளிகளுக்கு  CRP அளவு அதிகமாக இருந்த தோடு மற்றும் ட்ரோபோனன் சோதனையிலும் பாஸிடிவ் என முடிவு வெளியாகியுள்ளது. இவர்களில்  3 ஆண்டுகளில் காணப்பட்ட இறப்பு ஆபத்து சுமார் 35 சதவீதமாக இருந்தது.

மேலும் படிக்க | இதய ஆரோக்கியம்: மாரடைப்பு அபாயத்தை நீக்கும் ‘சிறந்த’ உணவுகள்!

லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும்

சரியான நேரத்தில் பரிசோதிக்கப்பட்டு, அழற்சி எதிர்ப்பு மருந்துகளை உட்கொண்டால், லட்சக்கணக்கான மக்களை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்பது இந்த ஆய்வின் மூலம்  தெரியவந்துள்ளது. லண்டன் இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் ராம்ஜி கமீஸ் கூறுகையில், இதர வகையான பரிசோதனைகளை விட இந்த சோதனையின் மூலம், பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உள்ள மாரடைப்பு அபாயத்தை சிறந்த வகையில் அடையாளம் காணலாம் எனக் கூறினார்.

மாரடைப்பு அச்சுறுத்தலை 43% குறைக்கலாம்

இந்த ஆராய்ச்சிக்கு நிதியளித்த பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின் பேராசிரியர் ஜேம்ஸ் லீப்பர், 'டாக்டர்களின் மருத்துவக் கருவியில் சேர்க்கப்பட வேண்டிய மதிப்புமிக்க சாதனம் இது' என்றார். ஒரு நாளைக்கு சுமார் 4 மணி நேரம் சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தை 43 சதவீதம் குறைக்கலாம் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாரடைப்பின் அறிகுறிகள்

அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மாரடைப்புக்கான பல அறிகுறிகளை வழங்கியுள்ளன. இதில், மார்பு வலி மற்றும் அல்லது அசௌகரியம் மிக முக்கியமானது. பலவீனம், தொண்டை, இடுப்பு அல்லது தாடை வலி ஆகியவை இந்த தீவிர நோயை சுட்டிக்காட்டுகின்றன. தோள்பட்டையில் அசௌகரியம் அல்லது வலி இருந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும் படிக்க | பச்சை காய்கறிகள் இதய நோய் அபாயத்தை தடுக்கிறதா; ஆய்வு கூறுவது என்ன!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News